இலங்கை பிரதான செய்திகள்

SLPP – CWC உடன்படிக்கை எட்டப்பட்டது – கோத்தாபயவை கைப்பிடித்தார் தொண்டா…

ஜனாதிபதி தேர்தல் தொடர்பான புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இடையே  கைச்சாத்திடப்பட்டுள்ளது. குறித்த புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வு கொழும்பு இலங்கை மன்றக் கல்லூரியில் இடம்பெற்றது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டடானும், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸூம் குறித்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர். நிகழ்வில் எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்‌ஸவும் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஸவும் இரு கட்சி சார்ந்த உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

 

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.