வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கொல்லப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் தொடர்பில் விரைவில் விசாரணைகள் ஆரம்பிக்கப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர்களின் கொலை சம்பவங்களுடன் ஊடகவியலாளர்கள் கட்டத்தப்பட்டு, காணாமல் போகச் செய்யப்பட்ட மற்றும் தாக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பிலும் விசாரணை நடத்தப்படும் எனவும் பிரதமர் மேலும் தெரிவத்துள்ளார்
யாழ்ப்பாணத்தில் நேற்று (17) மாலை நடைபெற்ற பிரதமரின் ஊடகவியலாளர் சந்திப்பின் போது உடகவியலாளர் ஒருவர் சிங்கள ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்ட விடயத்தில் அரசாங்கம் காட்டும் அக்கறை, கொல்லப்பட்ட , கடத்தப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் தொடர்பில் காட்டப்படவில்லை என எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே பிரதமர் மேற்கண்டவாறு பதிலளித்துள்ளார்.
முதலில் பாராளுமன்ற உறுப்பினர் ரவிராஜின் கொலை தொர்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது எனவும் அந்த கொலை தொடர்பில் நடந்த விசாரணைகளில் ஏற்பட்ட திருப்பதை தாங்கள் எதிர்பார்க்கவில்லை எனவும் தெரிவித்த பிரதமர் கொல்லப்பட்ட, காணாமல் போகச் செய்யப்பட்ட, தாக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பிலும் விசாரணைகள் நடத்துவோம் எனக் குறிப்பிட்டுள்ளார். #வடக்கு #கிழக்கு #தமிழ் #ஊடகவியலாளர்கள் #விசாரணை