முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட சுதந்திரபுரம் பகுதியில் மனித எலும்பு எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. சுதந்திரபுரம் கொலனி பகுதியில் தனியார் ஒருவரின் காணியில் ஒரு பகுதியில் மண் எடுத்து மறு பகுதியில் கொட்டியுள்ளார். இதன்போது எடுக்கப்பட்ட மண்ணில் புதையுண்ட நிலையில் மனித எச்சங்கள் நேற்று (20.10.19) அடையாளம் காணப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தினை தொடர்ந்து புதுக்குடியிருப்பு காவற்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, புதுக்குடியிருப்பு காவற்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று இடங்களை அடையாளப்படுத்தியுள்ளனர். இந்த நிலையில் இந்தப் பகுதியில் உள்ள எலும்பு எச்சங்களை மீட்பதற்கு நீதிமன்ற உத்தரவு இன்று (21.10.19) பெற்று நீதிபதி மற்றும் தடையவியல் காவற்துறையினர் இணைந்து குறித்த மனித எச்சங்களை மீட்கவுள்ளதாக புதுக்குடியிருப்பு காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.