Home இலங்கையாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம் நடத்திய தனிநாயகம் அடிகள் நினைவரங்கம்…

யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம் நடத்திய தனிநாயகம் அடிகள் நினைவரங்கம்…

by admin

யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம் முன்னெடுத்த தமிழ்த்தூது தனிநாயகம் அடிகள் நினைவரங்கம் யாழ். திருமறைக் கலாமன்ற கலைத்தூது கலையகத்தில் தமிழ்ச்சங்க உபதலைவர் அருட்பணி ஜெறோ செல்வநாயகம் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்வில் தனியாகம் அடிகளின் உருவச்சிலைக்கு அருட்பணி ஜெறோ அடிகளாரும் தமிழ்ச்சங்கத் தலைவர் ச.லலீசனும் மலர் மாலை அணிவித்தனர். சியன தேசிய கல்வியியற் கல்லூரி விரிவுரையாளர் சி. கேசவன் நினைவுப் பேருரையாற்றினார். தமிழ்ச்சங்கம் நடத்திய விவாதப் போட்டிக்கான இறுதிப் போட்டியும் நடைபெற்றது.

நிகழ்வில் தமிழ்ச்சங்கப் பெருந்தலைவர் பேராசிரியர் அ.சண்முகதாஸ், முனைவர் மனோன்மணி சண்முகதாஸ், யாழ். மாநகர ஆணையாளர் த.ஜெயசீலன் , தமிழ்ச்சங்கப் பொருளாளர் பேராசிரியர் தி.வேல்நம்பி, செயலாளர் விரிவுரையாளர் இ.சர்வேஸ்வரா, அகில இலங்கை இந்துக் குருமார் அமைப்பின் தலைவர் சிவஸ்ரீ கு.வை.கா. வைத்தீஸ்வரக் குருக்கள், தமிழகப் பேச்சாளர் டாக்டர் வே.சங்கரநாராயணன் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், பல்கலைக்கழக, ஆசிரிய கலாசாலை மாணவர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

படங்கள்: ஐ.சிவசாந்தன்

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More