ஆயுதக்குழு ஒன்றைச் சேர்ந்தவரும் முன்னாள் கிழக்கு மாகாணசபையின் அம்பாறை மாவட்ட உறுப்பினருமான ஒருவரும், காவற்துறை உத்தியோகத்தரும் மன்னார் இலுப்பைக் கடவை பிரதேசத்தில் சொகுசு வாகனம் ஒன்றில் 164.3 கிலோ கிராம் கஞ்சாவுடன், கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் இருவரையும் எதிிர்வரும் 14 நாட்டகள் விளக்கமறியலில் வைக்கு மாறு மன்னார் நீதவான் நீதிமன்ற நீதவான்எம். கணேசராஜா இன்று செவ்வாய்க்கிழமை (22.10.19) உத்தரவிட்டார்.
மன்னார் இலுப்பைக்கடவை வீதியல் அமைக்கப்பட்டிருக்கும் கடற்படையின் வீதி சோதனை சாவடியில் சம்பவ தினம் 19 ஆம் திகதி சொகுசு வானம் ஒன்று வீதிச் சோதனைச் சாவடி ஊடாக செல்ல முற்பட்ட நிலையில் அதனை நிறுத்துமாறு கடற்படையினர் சமிக்கை காட்டியுள்ளனர். எனினும் அதனை மீறி வாகனம் சென்ற போது கடற்படையினர் வாகனம் மீது துப்பாக்கி பிரயோகம் செய்து குறித்த வாகனத்தை கைப்பற்றி உள்ளனர்.
இதனையடுத்து இந்த வாகனத்தை சோதனை செய்த போது அதில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பொதிகளில் 164.3 கிலோ கிராம் கஞ்சாவை மீட்டதுடன் அந்த வாகனத்தை செலுத்திச் சென்ற முன்னாள் ஆயுத குழுவைச் சேர்ந்த வரும் முன்னாள் கிழக்கு மாகாண சபையின் அம்பாறை மாவட்ட உறுப்பினர் உட்பட காவற்துறை உத்தியோகத்தர் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களை இரண்டு நாள் காவற்துறை தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்த பின்னர் இன்று செவ்வாய்க்கிழமை (22) மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் எம்.கணேச ராஜா முன்னிலையில் ஆஜர் படுத்தப்பட்ட போது இருவரையும் எதிர்வரும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.