155
உயிர்த்தஞாயிறு தினமன்று நாட்டின் பல இடங்களில் ஏற்பட்ட பயங்கரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழு, தனது இறுதி அறிக்கையை இன்று (23) நாடாளுமன்றில் சமர்ப்பிக்கவுள்ளது.
200 பக்கங்களை கொண்டதாக இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள தெரிவுக்குழுவின் தலைவர் பிரதிசபாநாயகர் ஆனந்த குமாரசிறி இத்தகைய தாக்குதல் சம்பவங்கள் எதிர்காலத்தில் இடம்பெறாமல் தடுப்பதற்கு எடுக்கப்படவேண்டிய நடவடிக்கை மற்றும் அறிவுறுத்தல்கள் குறித்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். #உயிர்த்தஞாயிறு #அறிக்கை #நாடாளுமன்றில்
Spread the love