Home உலகம்மீண்டும் கனடாவின் பிரதமராக ஜஸ்டின் ட்ரூடோ

மீண்டும் கனடாவின் பிரதமராக ஜஸ்டின் ட்ரூடோ

by admin

கனடாவில் நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைப்பதன் மூலம் ஜஸ்டின் ட்ரூடோ தொடர்ந்து 2-வது முறையாகவும் அந்நாட்டின் பிரதமராகிறார்.

நிலப்பரப்பில் உலகின் 2-வது மிகப்பெரிய நாடாக விளங்கும் கனடாவில் 338 தொகுதிகளை கொண்ட நாடாளுமன்றத்துக்கு நேற்று முன்தினம் தேர்தல் நடைபெற்றது.

இதில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான லிபரல் கட்சிக்கும், அன்ட்ரூ ஷீர் தலைமையிலான கன்சர்வேட்டிவ் கட்சிக்கும் இடையே நேரடி போட்டி நிலவிய நிலையில் நேற்று மாலை வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது.

இந்த தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை என்ற போதிலும் ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சி, 157 இடங்களும் கன்சர்வேட்டிவ் கட்சிக்கு 121 இடங்களும் கிடைத்துள்ளன. ஆட்சி அமைக்க 170 இடங்கள் தேவை என்கிற நிலையில், ஜஸ்டின் ட்ரூடோவுக்கு 13 நாடாளுமன்ற ஆதரவு மட்டுமே தேவைப்படுகின்றது.
இந்தநிலையில் இந்திய வம்சாவளி சீக்கியரான ஜக்மித் சிங்கின், புதிய ஜனநாயக கட்சி ஆதரவுடன், ஜஸ்டின் ட்ரூடோ மீண்டும் ஆட்சியமைப்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. புதிய ஜனநாயக கட்சி 20 இடங்களை கைப்பற்றியுள்ளது.

கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைப்பதன் மூலம் ஜஸ்டின் ட்ரூடோ தொடர்ந்து 2-வது முறையாக பிரதமராகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  #கனடா #பிரதமர்  #ஜஸ்டின்ட்ரூடோ

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More