மரண தண்டனையை அமுல்படுத்துவதற்கு எதிராக பிறப்பிக்கப்பட்டிருந்த இடைக்கால தடையுத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் டிசம்பர் 10 ஆம் திகதி வரை குறித்த இடைக்கால தடையுத்தரவை நீடிப்பதாக உயர் நீதிமன்றம் இன்று (29) உத்தரவிட்டுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் போதைப் பொருள் குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கான ஆவணங்களில் ஜனாதிபதி கையொப்பமிட்டிருந்த நிலையில் அதற்கெதிராக, உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்பட்டது.
குறித்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட மூன்று நீதியரசர்கள் அடங்கிய குழாம், மரண தண்டனையை அமுல்படுத்துவதற்கு எதிராக கடந்த ஜூலை மாதம் 05 ஆம் திகதி இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. #மரணதண்டனை #இடைக்காலதடையுத்தரவு #நீடிப்பு