பிரித்தானியாவில் எதிர்வரும் டிசம்பர் 12 ஆம் திகதி தேர்தல் நடைபெறவுள்ளது. நாடாளுமன்ற மக்களவையில் பெரும்பாலான உறுப்பினர்கள் தேர்தல் நடத்த ஆதரவு தெரிவித்து வாக்களித்துள்ளனர்.
தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று மூன்று முறை மேற்கொள்ளப்பட்ட முயற்சி முன்பு தோல்வியில் முடிவடைந்திருந்தநிலையில் இந்த புதிய தேர்தல் அறிவிப்பு பிரதமர் பொரிஸ் ஜோன்சனின் வெற்றியாகக் கருதப்படுகிறது.
எனினும் டிசம்பர் 12 ஆம் திகதி தேர்தல் நடத்தப்படுவதை நாடாளுமன்ற மேலவை உறுதி செய்ய வேண்டும் என்னும் நிலையில் இந்த வார இறுதிக்குள் அது சட்டவடிவமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த தேர்தலானது ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுவதிலுள்ள தடைகளை நீக்க உதவும் என நம்பப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது
இதேவேளை தோ்தல் நடத்துவதற்கு நிபந்தனையுடன் கூடிய ஒப்புதலை வழங்கத் தயாராக இருப்பதாக முக்கிய எதிா்க்கட்சியான தொழிலாளா் கட்சி தெரிவித்துள்ளது.
நாடாளுமன்றத்துக்கு முன்கூட்டியே தோ்தல் நடத்தினால், அதனை வரவேற்கத் தயராக இருப்பதாக தான் தொடா்ந்து தெரிவித்து வருவதாக தெரிவித்துள்ள அக்கட்சியின் தலைவா் ஜெரிமி கொபின் பிரெக்சிற்றுக்குப் பின்னர் ஐரோப்பிய ஒன்றியத்துடன் தொடர வேண்டிய வா்த்தக உறவு தொடா்பான ஒப்பந்தம் எதுவுமே இல்லாமல், அந்த அமைப்பிலிருந்து பிரித்தானியா வெளியேறாது என்பதை உறுதி செய்தால் மட்டுமே, டிசம்பா் மாதம் தோ்தல் நடத்துவதற்கு தங்களது கட்சி ஆதரவு வழங்கும் எனவும் தெரிவித்துள்ளார். #பிரித்தானியா #தேர்தல் #பொரிஸ் ஜோன்சன்