இலங்கை தமிழரசு கட்சி முடிவாக அன்னம் சின்னத்தில் போட்டியிடுகின்ற சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு வழங்குவதென முடிவெடுத்துள்ளள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
ஏழு மணித்தியாலய கலந்துரையாடலின் பின்னர் இந்த முடிஏ எட்டப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
தமிழரசுகட்சியின் மத்தியகுழு கூட்டம் வவுனியா விருந்தினர் விடுதி ஒன்றில் இன்று காலை 10மணியிலிருந்து மாலை வரை இடம்பெற்றதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இந்த தீர்மானத்தினை இலங்கை தமிழரசு கட்சியின் உத்தியோக பூர்வ செயற்குழு இன்றையதினம் எடுத்திருந்தாலும், தமிழ்தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சியாக இருக்கின்ற காரணத்தினால் இதனை அறிவிப்பது மற்றும் தொடர்ந்தும் முன்னெடுத்து செல்லவேண்டிய விடயங்களை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தனின் கைகளில் ஒப்படைத்துள்ளதாகவும் மற்றைய இரண்டு கட்சித்தலைவர்களோடும் கலந்தாலோசித்து இந்த தீர்மானத்தை அறிவிப்பதற்கான நடவடிக்கைகளை அவர் மேற்கொள்வார் எனவும் சுமந்திரன் தெரிவித்துள்ளார். #இலங்கைதமிழரசுகட்சி #சஜித்பிரேமதாச #ஆதரவு #அன்னம் #சுமந்திரன்