அயோத்தியில் ராமஜென்ம பூமி என்று இந்துக்கள் அழைக்கும் பாபர் மசூதி இருந்த இடம் யாருக்குச் சொந்தம் என இன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கவுள்ள நிலையில் உத்தரப்பிரதேச மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு அமலில் உள்ளது.
டெல்லியில் உச்ச நீதிமன்றத்தைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் 144 தடை உத்தரவு அமலாக்கப்பட்டுள்ளதுடன் அங்கு காவலும் பலப்படுத்தப்பட்டுள்ளது..
தீர்ப்பை எழுதப்போகும் 5 நீதிபதிகள் யார்?
அரசியல் ரீதியில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ராம ஜென்மபூமி – பாபர் மசூதி நிலத்தகராறு வழக்கை ஐந்து நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சுமார் 40 நாட்களாக தொடர்ந்து விசாரித்து வந்த நிலையில், அக்டோபர் 16ம் தேதி இந்த வழக்கின் இறுதி விசாரணை முடிந்தது தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான இந்த அமர்வில், அடுத்த தலைமை நீதிபதியாக பதவியேற்க உள்ள எஸ்.ஏ.பாப்டே, நீதிபதி டி.ஒய். சந்திரசூட், நீதிபதி அசோக் பூஷண், நீதிபதி அப்துல் நசீர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.