அமெரிக்க பதிவாளர் திணைக்களம் வெளியிட்டுள்ள மூன்றாவது காலாண்டுக்குரிய, குடியுரிமையைத் துறந்தவர்களின் பட்டியலில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஸவின் பெயர் இடம்பெறவில்லை என, தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமைச்சர் ஹரீன் பெர்னான்டோ உள்ளிட்ட ஐக்கிய தேசியக் கட்சியினர், அவரது பெயர் இல்லாத பட்டியலை சமூக ஊடகங்களில் வெளியிட்டு, பிரசாரங்களை முன்னெடுத்துள்ள நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தனது டுவிட்டர் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள பதிலிலேயே இவ்வாறு விளக்கமளித்துள்ளார்.
அதிலஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஸவின் அமெரிக்க குடியுரிமை தொடர்பான சந்தேகங்களுக்கு அனைவருக்கும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதற்கான ஆதரம் உள்ளது. இனி அவர் அமெரிக்க குடிமகன் அல்ல என குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் கோத்தாபய ராஜபக்ஸவின் குடியுரிமை துறப்பு ஆவணத்தின் பிரதியையும், அமெரிக்க கடவுச்சீட்டின் படத்தையும் நாமல் வெளியிட்டுள்ளார்.
கோத்தாபய ராஜபக்ஸவின் கடவுச்சீட்டின் முதல் பக்கத்தில் ரத்து என ஆங்கிலத்தில் சிவப்பு மையினால் முத்திரை குத்தப்பட்டுள்ளதுடன், இரண்டு இடங்களில் துளையிடப்பட்டுள்ளதுடன் படம், மற்றும் விவரங்கள் அடங்கிய பக்கத்திலும் இரண்டு துளைகள் இடப்பட்டுள்ளன. #கோத்தாபய #அமெரிக்ககுடியுரிமை #விளக்கமளிப்பு #