முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை தொடர்பாக குற்றம்சுமத்தப்பட்டு சிறையில் உள்ள பேரறிவாளனுக்கு ஒரு மாதம் பரோல் வழங்கப்பட்டுள்ளதனைளயடுத்து அவர் ஜோலார்பேட்டையில் உள்ள அவரது வீட்டுக்கு அவரை காவல்துறையினர் அழைத்து சென்றுள்ளனர். பேரறிவாளனின் தந்தை குயில்தாசன் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளதாக தெரிவித்து அற்புதம்மாள் குடும்பத்தினர் பேரறிவாளனுக்கு பரோல் வழங்க வேண்டும் என தமிழக சிறைத்துறைக்கு விண்ணப்பித்ததனையடுத்து அவருக்கு இவ்வாறு ஒரு மாத பரோல் கிடைத்துள்ளது.
இன்று காலை புழல் சிறையிலிருந்து வேலூர் சிறைக்கு பேரறிவாளன் பலத்த பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்ட நிலையில் அங்கு பரோல் படிவம் சிறைச்சாலைவஅதிகாரிகளிடம் வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து பலத்த பாதுகாப்புடன அவரது வீட்டுக்கு பேரறிவாளனை அழைத்து சென்றுள்ளனர்.
பேரறிவாளனை யாரும் சந்திக்க அனுமதியில்லை என்பதுடன் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது #பேரறிவாளன் #பரோல் #ராஜீவ்காந்தி #அற்புதம்மாள்
Add Comment