நாளை (16.11.19) நடைபெறவுள்ள தேர்தலில் வாக்களிப்பதற்காக 15 மில்லியனுக்கு அதிகமான மக்கள் தகுதி பெற்றுள்ளனர். ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்கு அடையாள அட்டை இல்லாதவர்களுக்காக 2 இலட்சம் தற்காலிக அடையாள அட்டைகள் ஆட்பதிவு திணைக்களத்தின் மூலம் தயாரிக்கப்பட்டுள்ளன.
இவை தேர்தல் ஆணைக்குழுவிடம் கையளிக்கப்பட்டுள்ளன. இவை மாவட்ட தெரிவு அத்தாட்சி அதிகாரிகள் ஊடாக கிராம உத்தியோகத்தர் மூலம் பெற்றுக்கொள்ள முடியும் என்று ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது. தற்காலிக அடையாள அட்டைக்கு விண்ணப்பித்தவர்கள் கிராம உத்தியோகத்தர் மூலம் அவற்றை பெற்றுக்கொள்ள முடியும். இந்த அடையாள அட்டைகளை வாக்களிப்பதற்காக மாத்திரமே பயன்படுத்த முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.