யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் புதிய ஜனநாயக முன்னணியின் சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாச அமோக வெற்றியை பெற்றுள்ளார். அதன்படி, யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் அவர் மொத்தமாக 312,722 வாக்குகளை பெற்றுள்ளார்.
அவரை எதிர்த்து போட்டியிட்ட கோத்தாபய ராஜபக்ஸ 23,261 வாக்குகளை பெற்றார். எம்.கே.சிவாஜிலிங்கம் 6,845 வாக்குகளையும் மற்றும் ஆரியவன்ச திஸாநாயக்க 6,790 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.
யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டம், மானிப்பாய் தேர்தல் தொகுதியில் சஜித் பிரேமதாச 31,369 வாக்குகளையும், கோத்தாபய ராஜபக்ஸ 1,859 வாக்குகளையும், ஆரியவன்ஸ திசாநாயக்க 790 வாக்குகளையும் மற்றும் எம்.கே. சிவாஜிலிங்கம் 534 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.
உடுப்பிட்டி தேர்தல் தொகுதியின் தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் சஜித் பிரேமதாச 19,307 வாக்குகளையும், கோத்தாபய ராஜபக்ஸ ஆயிரத்து 334 வாக்குகளையும் எம்.கே. சிவாஜிலிங்கம் 942 வாக்குகளையும் மற்றும் ஆரியவங்ஸ திசாநாயக்க 529 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.
யாழ் மாவட்டம் கிளிநொச்சி தேர்தல் தொகுதியின் தேர்தல் முடிவுகளுக்கு அமைய சஜித் பிரேமதாச 55,585 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளதுடன் அங்கு கோத்தாபய ராஜபக்ஸ ஷ 3,238 வாக்குகளையும் ஆரியவன்ஸ திசாநாயக்க 1,041 வாக்குகளையும் மற்றும் எம்.கே. சிவாஜிலிங்கம் 526 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.
யாழ்ப்பாணம் மாவட்டத்தின் தேர்தல் முடிவுகளுக்கு அமைய சஜித் பிரேமதாச 17,961 வாக்குகளை பெற்று வெற்றிப்பெற்றுள்ளதுடன், அங்கு கோத்தாபய ராஜபக்ஸ 1,563 வாக்குகளையும், எம்.கே. சிவாஜிலிங்கம் 810 வாக்குகளையும் மற்றும் அனுரகுமார திசாநாயக்க 239 வாக்குகளையும் பெற்றுள்ளனர்..
மேலும் யாழ்.மாவட்டம் கோப்பாய் தேர்தல் தொகுதியின் தேர்தல் முடிவுகளுக்கு அமைய, சஜித் பிரேமதாச 30,835 வாக்குகளை பெற்று வெற்றிப்பெற்றுள்ளதுடன், கோட்டாபய ராஜபக்ஷ 1,858 வாக்குகளையும், ஆரியவங்ஸ திசாநாயக்க 897 வாக்குகளையும், எம்.கே. சிவாஜிலிங்கம் 462 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.
அதேபோல் யாழ்ப்பாண மாவட்டம் சாவகச்சேரி தேர்தல் தொகுதியின் தேர்தல் முடிவுகளுக்கு அமைய சஜித் பிரேமதாச 28,007 வாக்குகளை சுவிகரித்து வெற்றி பெற்றுள்ளதுடன், கோத்தாபய ராஜபக்ஸ ஷ 1,775 வாக்குகளையும், ஆரியவங்ஸ திசாநாயக்க 656 வாக்குகளையும் பெற்றுள்ள நிலையில், எம்.கே. சிவாஜிலிங்கம் 377 வாக்குகளை மாத்திரமே பெற்றுள்ளனர்.
அத்துடன், யாழ். வட்டுக்கோட்டை தொகுதியின் தேர்தல் முடிவுகளுக்கு அமைய சஜித் பிரேமதாச 26,238 வாக்குகளையும் கோத்தாபய ராஜபக்ஸ 1,728 வாக்குகளையும், எம்.கே. சிவாஜிலிங்கம் 727 வாக்குகளையும், ஆரியவங்ஸ திசாநாயக்க 594 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.
காங்கேசன்துறை தேர்தல் தொகுதியின் முடிவுகளுக்கு அமைய சஜித் பிரேமதாச 23,773 வாக்குகளை பெற்றுள்ளதுடன், கோத்தாபய ராஜபக்ஸ 1,688 வாக்குகளையும், ஆரியவன்ஸ திசாநாயக்க 586 வாக்குகளையும், எம்.கே. சிவாஜிலிங்கம் 475 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.
மேலும் பருத்தித்துறை தேர்தல் தொகுதியின் முடிவுகளுக்கு அமைய சஜித் பிரேமதாச 19,931 வாக்குகளை பெற்று வெறிப்பெற்றுள்ளதுடன், கோத்தாபய ராஜபக்ஸ 1,848 வாக்குகளையும், எம்.கே. சிவாஜிலிங்கம் 644 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.
யாழ்ப்பாணம் மாவட்டத்தின் யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதியின் முடிவுகளுக்கு அமைய சஜித் பிரேமதாச 20,792 வாக்குகளையும், கோத்தாபய ராஜபக்ஸ 1,617 வாக்குகளையும், எம்.கே. சிவாஜிலிங்கம் 466 வாக்குகளையும், ஆரியவங்ஸ திசாநாயக்க 288 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.
யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை தேர்தல் தொகுதியின் முடிவுகளுக்கு அமைய சஜித் பிரேமதாச 11,319 வாக்குகளையும் கோத்தாபய ராஜபக்ஸ 2,917 வாக்குகளையும் ஆரியவங்ஸ திசாநாயக்க 382 வாக்குகளையும் எம்.கே. சிவாஜிலிங்கம் 223 வாக்குகளையும் பெற்றுக் கொண்டனர்.
நல்லூர் தேர்தல் தொகுதியின் முடிவுகளுக்கு அமைய சஜித் பிரேமதாச 27,605 வாக்குகளையும் கோத்தாபய ராஜபக்ஸ 1836 வாக்குகளையும், சிவாஜிலிங்கம் 659 வாக்குகளையும் பெற்றுள்ளனர். அதன்படி, யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச அமோக வெற்றியை பெற்றுள்ளார்.