உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாயின் பதவிக்காலம் முடிவடைந்ததையடுத்து, உச்ச நீதிமன்றத்தின் 47-வது தலைமை நீதிபதியாக, 63 வயதான நீதிபதி எஸ்.ஏ.பாப்டே இன்று பதவியேற்றுக்கொண்டுள்ளார். அவருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவிப்பிரமாணம் செய்துவைத்துள்ளார்.
வட கிழக்கு மாநிலங்களிலிருந்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்ற முதல் நபர் என்ற பெருமையை பெற்ற ரஞ்சன் கோகாய், உச்ச நீதிமன்றத்தின் 46ஆவது தலைமை நீதிபதியாக கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் 3ஆம் திகதி பதவியேற்றிருந்தார். அவரது பதவிக்காலம் நேற்றுடன் நிறைவடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. #உச்சநீதிமன்றம் #பாப்டே #பதவியேற்பு #ரஞ்சன்கோகாயின்
Add Comment