223
யாழ்ப்பாணம் வேம்படி பெண்கள் உயர்தரப் பாடசாலையின் முன்னாள் அதிபரின் பெயரிடப்பட்டு குண்டுப் புரளியை ஏற்படுத்தும் அநாமதேயக் கடிதம் தொடர்பில் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் பி அறிக்கையைப் காவல்துறையினர் தாக்கல் செய்தனர்.
“சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெறுகின்றன. கண்டியிலிருந்தே அந்தக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது” என்று காவல்துறையினர் மன்றுரைத்தனர்.
அதனால் வழக்கை வரும் டிசெம்பர் 3ஆம் திகதிவரை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் ஒத்திவைத்தது.
வேம்படி பெண்கள் உயர்தரப் பாடசாலையில் இன்னும் ஒரு மாதத்தில் குண்டு வெடிக்கும் என்று ஆங்கில மொழியில் குறிப்பிடப்பட்டு திகதியிடப்படதாத அநாமதேயக் கடிதம் ஒன்று கடந்த ஒக்ரோபர் 31ஆம் திகதி கிடைக்கப்பட்டது.
வேம்படி பாடசாலை முன்னாள் அதிபர் வேணுகா சண்முகரத்தினம் என்ற பெயரில் பாடசாலை விலாசம் இடப்பட்டு வந்துள்ள அநாமதேயக் கடிதம் தொடர்பில் அவர் யாழ்ப்பாணம் காவல் நிலையத்தில் முறைப்பாடு வழங்கினார்.
முறைப்பாட்டாளரான பாடசாலை முன்னாள் அதிபர் ஓய்வு பெற்றுச் சென்றதை அறிந்திருந்த உரிய தாபால் உத்தியோகத்தர் அவர் இருக்கும் கொக்குவில் பகுதிக்குச் சொல்லும் தபால் உத்தியோகத்தரிடம் அந்தக் கடிதத்தைக் கொடுத்துவிட்டுள்ளார்.
முன்னாள் அதிபரின் வீட்டுக்குச் சென்ற போது, அங்கே எவரும் இல்லாததால் கடிதத்தை படலையால் போட்டுவிட்டு தபால் ஊழியர் வந்துள்ளர்.
அன்றைய தினம் மதியம் வீடு வந்த முன்னாள் அதிபர் கடிதத்தைப் பார்த்துவிட்டு யாழ்ப்பாணம் காவல்நிலையத்தில் முறைபாடு வழங்கியிருந்தார். #கடிதம் #விசாரணை #வேம்படி
Spread the love