பிரதமர் பதவியில் இருந்து தான் விலகுவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உத்தியோகபூர்வமாக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஸவிற்கு அறிவித்துள்ளார். தன்படி, இன்று (21.11.19) முற்பகல் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது பதவி வலகல் கடிதத்தை ஜனாதிபதியிடம் கையளித்துள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
தான் பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாகவும் இன்றைய தினம் உத்தியோகபூர்வமாக ஜனாதிபதிக்கு அறிவிக்கவுள்ளதாகவும் ரணில் விக்கிரமசிங்க நேற்று (20.11.19) ஊடகங்களுக்கு அறிக்கையொன்றை வௌியிட்டு குறிப்பிட்டிருந்தார். அதன்படி, ரணில் விக்கிரமசிஙக் இன்று முற்பகல் அலரி மாளிகையில் இருந்து விடைப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.