185
இந்திய கடற்படைக்கு சொந்தமான ´நிரிக்சன்´ என்ற கப்பல் திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. இந்த கப்பல் பயிற்சி நடவடிக்கைகளுக்காக நேற்று (25.11.19) திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. இலங்கை கடற்படையின் சம்பிரதாயங்களுக்கு அமைய இந்த கப்பலுக்கு வரவேற்பளிக்கப்பட்டுள்ளது. இதன்போது இரு நாடுகளுக்கும் இடையில் நினைவுச்சின்னங்களும் பறிமாற்றி கொள்ளப்பட்டன. இந்த கப்பல் பயிற்சி நடவடிக்கைகளை நிறைவு செய்து கொண்டு எதிர்வரும் டிசம்பர் மூன்றாம் திகதி நாட்டில் இருந்து புறப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டள்ளது.
Spread the love