ஹம்பாந்தோட்டை துறைமுகத்தினை சீனாவின் தனியார் நிறுவனத்துக்கு 99 ஆண்டுகள் குத்தகைக்கு வழங்கி முன்னாள் ஜனாதிபதி மைத்தரிபால சிறிசேனா மேற்கொண்ட ஒப்பந்தத்தினை தற்போதைய கோத்தாபய அரசு ரத்து செய்துள்ளது.
கடந்த 2017-ம் ஆண்டில் அப்போது பிரதமராக இருந்த ரணில் விக்ரசிங்க அதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தார். இந்த துறைமுகத்தை போர்க்கப்பல் நிறுத்தும் தளமாக சீனா மாற்றும் எனவுமட இதனால் இந்தியாவுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படும் என்பதனால் இந்த ஒப்பந்தத்தனை ரத்து செய்ய வேண்டும் என இந்தியா வலியுறுத்தி வந்தது.
நாட்டின் பொருளாதார மேம்பாட்டுக்காக இத்துறைமுகம் சீனாவுக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளது எனவும் அங்கு ராணுவ தளம் அமைக்க ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம் எனவும் இலங்கை அரசு தெரிவித்து வந்தது.
இந்தநிலையில் ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்தின் போதும் தற்போதைய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஸ தான் தேர்தலில் வெற்றி பெற்று புதிய ஜனாதிபதியானல் ஹம்பாந்தோட்டை துறைமுக குத்தகை ஒப்பந்தம் ரத்து செய்யப்படும் என உறுதியளித்திருந்தார்.
அதன்படி தற்போது ஜனாதிபதியாக பொறுப்பேற்றுள்ள கோத்தாபய ராஜபக்ஸ அரசு ஹம்பாந்தோட்டை துறைமுக குத்தகை ஒப்பந்தத்தை ரத்து செய்ய முடிவு செய்துள்ளது.
இத்தகவலை பிரதமர் மகிந்த ராஜபக்ஸவின் பொருளாதார ஆலோசகரும் இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனருமான அஜித் நிவார்ட் கபிரால் நேற்றையதினம் நடைபெற்ற செய்தியாளர் மகாநாட்டில் தெரிவித்துள்ளார்.
ஹம்பாந்தோட்டை துறைமுக குத்தகை ஒப்பந்தம் ரத்து செய்யப்படவுள்ளமையானது இந்தியா – இலங்கை இடையேயான உறவு மேலும் வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. #ஹம்பாந்தோட்டை #சீனநிறுவனத்துக்கு #ஒப்பந்தம் #ரத்து #கோத்தாபய