434
மன்னார் மாவட்டத்தில் தொடச்சியாக பெய்து வரும் கடும் மழை காரணமாக வட மாகாணத்தின் இரண்டாவது பெரிய குளமாக காணப்படும் மன்னார் முருங்கன் கட்டுக்கரை குளம் நிறம்பி தற்போது வான் பாய்ந்து வருகின்றது.
இதனால் அப்பகுதியைச் சேர்ந்த பல சிறிய மற்றும் நடுத்தர குளங்களும் நிறைந்து வான் பாய்ந்து வருகன்றது. -இதனால் 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டிற்கான கால போக நெற்செய்கை பாதிப்படைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.-இது வரை மன்னார் மாவட்டத்தில் மன்னார்,நானாட்டான்,முசலி,மாந் தை மேற்கு மற்றும் மடு ஆகிய 5 பிரதேசச் செயலாளர் பிரிவுகளிலும் சுமார் 200 ஏக்கர் நெற்செய்கை பாதிப்படைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
-மேலும் வயல் நிலங்களில் மழை நீர் தேங்கி காணப்படுவதினால் முளைத்த நெற் பயிர்கள் அழிவடையும் நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
மேலும் கால்நடை வளர்ப்பாளர்களும் கால் நடைகளை மேய்ச்சல் நிலங்களில் வைத்து பராமறிக்க பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. #மன்னார் #மழை #கட்டுக்கரைகுளம் #விவசாயநடவடிக்கைகள் #பாதிப்பு
Spread the love