பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் மகமூத் குர்ஸ்சி 2 நாட்கள் உத்தியோகப்பூர்வ பயணமாக இலங்கை சென்றுள்ளார். இலங்கை விமான சேவைக்கு சொந்தமான விமானத்தின் ஊடாக நேற்று (01) இரவு அவர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்துள்ளார்.
பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர், ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஸ, பிரதமர் மகிந்த ராஜபக்ஸ உள்ளிட்ட பலருடன் முக்கிய சந்திப்புகளை நடத்த உள்ளார். அத்துடன் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் கடிதம் ஒன்றையும் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஸவிடம் கையளிப்பதற்காக தான் கொண்டு வந்துள்ளதாகவும் பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார். #பாகிஸ்தான் #வெளிவிவகாரஅமைச்சர் #இலங்கை #மகமூத்குர்ஸ்சி