Home இலங்கையு.என்.டி.பியின் ஆசிய பசுபிக் பிராந்தியத்துக்கான பணிப்பாளராக இலங்கைத் தமிழ்ப் பெண்

யு.என்.டி.பியின் ஆசிய பசுபிக் பிராந்தியத்துக்கான பணிப்பாளராக இலங்கைத் தமிழ்ப் பெண்

by admin


ஐ.நா. அபிவிருத்தித் திட்டத்தின் (யு.என்.டி.பி) ஆசிய பசுபிக் பிராந்தியத்துக்கான பணிப்பாளராக இலங்கைத் தமிழ்ப் பெண்ணான கன்னி விக்னராஜா என்பவர் பதவியேற்றுள்ளார். முன்னர் ஐ.நா பொதுச்செயலாளர் அன்ரனியோ குட்ரெஸ்ஸினால் ஐ.நா அபிவிருத்தித் திட்டத்துக்கான உதவி செயலாளர் நாயகமாகவும், உதவி நிர்வாகியாகவும் நியமிக்கப்பட்டிருந்த இவர் ஐ.நா முறைமைகளில் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாக நீண்டகால அனுபவம் கொண்டவராவார்.

இலங்கையில் பிறந்த கன்னி விக்னராஜா பிறின்ஸ்ரென் பல்கலைக்கழகத்தில் பொது நிர்வாகத்துறையில் முதுமாணி பட்டம் பெற்றதுடன் அமெரிக்காவின்  Bryn Mawr   கல்லூரியில் பொருளாதாரத் துறையில் இளமாணி பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது   #யு.என்.டி.பி  #ஆசிய  #பணிப்பாளர்  #தமிழ்ப் பெண்  #கன்னிவிக்னராஜா

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More