175
மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கூராய் ஆற்றிலிருந்து மணல் மணல் ஏற்றிக் கொண்டு கனரக வாகனங்கள் செல்வதால் வீதிகள் பாதிப்படைந்து போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டு உள்ளதாகவும் மழைக் காலத்தில் இவ் வீதியால் கனரக வாகனங்கள் செல்வதை நிறுத்துமாறும் பிரதேச மக்கள் உரிய அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்கு உற்பட்ட கூராய் சீது விநாயகர் புரம் வீதி 17.5 கிலோ மீற்றர் தூரம் உள்ள இவ்வீதியானது வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு சொந்தமானது. இந்த வீதி வழியாக தினமும் நூறு லோட்களுக்கும் அதிகமாக டிப்பர் மூலம் மணல் ஏற்றி செல்லப்படுகிறது . இதனால் வீதி முழுவதும் பாதிக்கப்பட்டு குன்றும் குழியுமாகி விட்டது.
செம்மண் சகதியாகவும் காணப்படும் குறித்த வீதியால் பாடசாலை மாணவர்கள் செல்லமுடியாது உள்ளதுடன் கர்ப்பிணித் தாய்மார், முதியவர்கள் அவசர சிகிச்சைகளுக்காக மருத்துவ மனைக்கு செல்ல முடியாத நிலையில் உள்ளதாகவும் தெரிவித்த பொது மக்கள் மழை காலத்திலாவது இந்த வீதி வழியாக கனரக வாகனங்கள் கொண்டு மணல் ஏற்றி செல்வதை தடுத்து நிறுத்தி பொது மக்களுக்கு உதவி செய்யுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இவ் விடையம் தொடர்பில் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் எஸ்.கேதீஸ்வரன் அவர்களிடம் வினவிய போது ..
இந்த வீதி அபிவிருத்திக்காக வந்த நிதி குறித்த வேளை ஆரம்பிக்கப்படாத காரணத்தால் திரும்பி சென்றுள்ளது. தொடர்ச்சியாக எமது முயற்சியால் கூராய் சீதுவிநாயக புரம் 17.5 கிலோ மீற்றர் வீதி “ஐ’ வேலைத் திட்டம் மூலமாக தார் வீதியாக அபிவிருத்தி செய்வதற்கு உள் வாங்கப்பட்டுள்ளது. இதற்கான வேலைத்திட்டங்கள் யாவும் வருகின்ற ஜனவரி மாதம் ஆரம்பிக்கப்படும்.
அத்துடன் மழைக் காலத்தில் கூராய் சீது விநாயகர் புரம் வீதியால் கனரக வாகனங்கள் மூலம் மணல் ஏற்றி செல்வது தொடர்பில் சம்பந்தப்பட்ட திணைக்களங்களுடன் பேசி நிறுத்துவதாக மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் எஸ்.கேதீஸ்வரன் மேலும் தெரிவித்தார். #மாந்தை #கனரகவாகனங்கள் #சீதுவிநாயகர்புரம் வீதி
Spread the love