முச்சக்கர வண்டியில் பயணிப்போர் குப்பைகளை வீதியில் வீசாமல் இருக்க தனது முச்சக்கர வண்டியில் குப்பை கூடை ஒன்றை பொருத்தியுள்ளார் அதன் ஓட்டுநர், அச்செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.
தென்னிலங்கையை சேர்ந்த முச்சக்கர வண்டி ஓட்டுநர் ஒருவரே அவ்வாறு செய்துள்ளார். அது தொடர்பிலான படங்களுடன் அவரது கருத்தும் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
“என்னுடைய ஆட்டோவில் பயணிப்பவர்கள் ஏதாவது சாப்பிடுவார்கள் அதில் மிஞ்சும் கழிவை வெளியில் தூக்கி எறிவார்கள் இவ்வாறு என் கண் முன்னால், இந்த சூழலுக்கு சென்றுசேரும் குப்பைகளை சரிசெய்ய நினைத்தேன் அதனால் என்னுடைய ஆட்டோவில் ஒரு குப்பை கூடை ஒன்றை பிரத்தியோகமாக நிறுவியுள்ளேன்.
பயணிகள் தங்களுடைய குப்பையை இந்த கூடையில் போடலாம் மாலையில் வீடு திரும்பியதும் அல்லது குப்பை கொட்ட அரசு ஒதுக்கியுள்ள இடங்களை தாண்டும் பொழுது சேகரித்த குப்பைகளை அங்கு கொட்டிவிடுகிறேன்.” என குறித்த முச்சக்கர வண்டி ஓட்டுநர் தெரிவித்துள்ளார்.