யாழில் இயங்கும் வன்முறை கும்பல்களில் ஒன்றான கேமி குழுவின் தலைவரின் சகோதரன் மீது வாள் வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த இளைஞன் வாள் வெட்டுக்கு இலக்காகிய நிலையில், கல்வியங்காடு பிள்ளையார் கோயில் பகுதியில் இருந்து படுகாயங்களுடன் கோப்பாய் காவற்துறையினரால் மீட்கப்பட்டு, யாழ்.போதானா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தை சேர்ந்த 26 வயதுடைய அஜித் என்ற இளைஞரே வெட்டுக் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார். இளைஞர் ஒருவர் வெட்டுகாயங்களுடன் உயிருக்கு போராடிய நிலையில் வீதியில் காணப்படுவதாக காவற்துறையினருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் இளைஞனை மீட்டு யாழ்.போதான வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
குறித்த இளைஞனை முச்சக்கர வண்டியில் ஏற்றி வந்த கும்பல், அப்பகுதியில் வைத்து இளைஞன் மீது சரமாரியாக வாளால் வெட்டிய பின் அவ்விடத்தில் இளைஞனை வீசி விட்டதாகவும், வேறு வன்முறை கும்பலுடன் ஏற்பட்ட முரண்பாடுகளால் அக்குழுவே இதனை மேற்கொண்டு இருக்கலாம் எனவும், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.