இலங்கை பிரதான செய்திகள்

சீரற்ற கால­நி­லை­யால் 2 இலட்சத்து 35 ஆயிரம் பேர் பாதிப்பு : பெரும் அவலத்தில் வடக்­கு­, கி­ழக்கு மக்கள்…

நாட்டில் இரு வாரங்­க­ளாக நிலவும் சீரற்ற கால­நிலை கார­ண­மாக பாதிக்­கப்­பட்­டோரின் எண்­ணிக்கை 2 இலட்சத்து 35 ஆயி­ரத்து 906 ஆக அதி­க­ரித்­துள்­ளது. இதேவேளை இவ்­வா­றான சீரற்ற கால­நிலை மேலும் சில தினங்­க­ளுக்கு நீடிக்கும் என்று  வளி­மண்­ட­ல­வியல் திணைக்­களம் எதிர்வு கூறி­யுள்­ளது.  கிழக்கு மற்றும் ஊவா மாகா­ணங்­க­ளிலும் பொலன்­ன­றுவை மாவட்­டத்­திலும் சீரற்ற கால­நிலை தொடரும் அதே வேளை, வட மாகா­ணத்­திலும் அநு­ரா­த­புரம் மாவட்­டத்­திலும் மழை குறையக் கூடும் எனவும் எதிர்வு கூறப்­பட்­டுள்­ளது.

கிழக்கு, ஊவா மற்றும் மத்­திய மாகா­ணங்­க­ளிலும் பொலன்­ன­றுவை மற்றும் அம்­பாந்­தோட்டை மாவட்­டங்­க­ளிலும் மழை அல்­லது இடி­யுடன் கூடிய மழை பெய்யும் என்றும் ஏனைய பிர­தே­சங்­களில் பிற்­பகல் ஒரு மணிக்கு பின்னர் மழை பெய்யக் கூடும் என்றும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

திரு­கோ­ண­மலை, மட்­டக்­க­ளப்பு, அம்­பாறை, பொலன்­ன­றுவை , நுர­ரெ­லியா, பதுளை மற்றும் மொன­ரா­கலை மாவட்­டங்­களில் 100 மில்லி மீற்­றரை விட அதிக மழை வீழ்ச்சி பதி­வாகும் என்று கூறப்­பட்­டுள்­ளது. காலி, மாத்­தறை, அம்­பாந்­தோட்டை , மாத்­தளை மற்றும் கண்டி மாவட்­டங்­களில் 75 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்­வாறு மழை அல்­லது இடி­யுடன் கூடிய மழை பெய்­கின்ற சந்­தர்ப்­பங்­களில் காற்றின் வேகம் அதி­க­ரிக்கக் கூடும் என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. மன்னார் தொடக்கம் காங்­கே­சன்­துறை, திரு­கோ­ண­மலை மற்றும் மட்­டக்­க­ளப்­புக்கு ஊடாக அம்­பாந்­தோட்டை வரை­யான கடற்­பி­ர­தே­சங்­களில் இடி­யுடன் கூடிய மழை பெய்யும்.

ஏனைய கடற்­பி­ர­தே­சங்­களில் மாலை அல்­லது இரவு வேளை­களில் மழை அல்­லது இடி­யுடன் கூடிய மழை பெய்யும். திரு­கோ­ண­மலை தொடக்கம் மட்­டக்­க­ளப்பு ஊடாக அம்­பாந்­தோட்டை வரை­யான கடற் பிர­தே­சங்­க­ளிலும் மழை பெய்யும்.

இவ்­வாறு மழை பெய்யும் சந்­தர்ப்­பங்­களில்  காற்றின் வேகம் மணித்­தி­யா­லத்­துக்கு 70 – 80 கிலோ மீற்றர் வரை அதி­க­ரிக்கும்.

பாதிப்­புக்கள்

நிலவும் சீரற்ற கால­நி­லையால் மணி­ச­ரிவு , வெள்ளம், மரம் முறிந்து வீழ்ந்­தமை, மின்னல் தாக்கம் போன்ற அனர்த்­தங்­களால் 20 மாவட்­டங்கள் அதிக பாதிப்­புக்­க­ளுக்கு உள்­ளா­கி­யுள்­ளன.

பதுளை, மொன­ரா­கலை, மட்­டக்­க­ளப்பு , அம்­பாறை, திரு­கோ­ண­மலை, மன்னார், முல்­லை­தீவு, கிளி­நொச்சி, வவு­னியா , கேகாலை, இரத்­தி­ன­புரி, கண்டி, நுவ­ரெ­லியா, மாத்­தளை, அநு­ரா­த­புரம், பொலன்­ன­றுவை, புத்­தளம், குரு­ணாகல், அம்­பாந்­தோட்டை மற்றும் மாத்­தறை ஆகிய மாவட்­டங்­களே இவ்­வாறு பாதிக்­கப்­பட்­டுள்­ளன.

குறித்த மாவட்­டங்­களைச் சேர்ந்த 13 ஆயி­ரத்து 542 குடும்­பங்­களைச் சேர்ந்த 45 ஆயி­ரத்து 858 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். அத்­தோடு சில அனர்த்­தங்­க­ளுக்கு முகங்கொடுத்து  8 பேர் காய­ம­டைந்­துள்­ளனர்.

வெள்ளம், மண்­ச­ரிவு போன்­ற­வற்­றினால் 20 வீடுகள் முழு­மை­யாக சேத­ம­டைந்­துள்­ள­துடன் 943 வீடுகள் பகு­தி­ய­ளவில் சேத­ம­டைந்­துள்­ளன. இவ்­வாறு பாதிக்கப்பட்ட 2609 குடும்­பங்­களைச் சேர்ந்த 8553 பேர் 90 தற்­கா­லிக நலன்­புரி முகாம்­களில் தங்க வைக்­கப்­பட்­டுள்­ளனர்.

வடக்கு கிழக்கில் பாதிப்பு

கிளி­நொச்­சியில் நேற்­று­முன்­தினம் இரவு முதல் நேற்­றுக்­காலை வரை பெய்த கன­மழைக் கார­ண­மாக மாவட்­டத்தின் பல பகு­திகள் வெள்­ளத்­தினால் மூழ்க்­கி­யுள்­ளன.

வெள்­ளத்­தினால் மூழ்­கி­யுள்ள பகு­தி­களில் சிக்­கி­யி­ருந்த பொது  மக்­களை நேற்­று­முன்­தினம் இரவு முதல் படை­யினர் மீட்டு பாது­காப்­பான இடங்­க­ளுக்கு கொண்டு சென்­றி­ருந்­தனர். அத்­தோடு க.பொ.த சாதா­ரண தரப்­ப­ரீட்­சைக்கு தோற்றும் மாண­வர்கள் சில பரீட்சை நிலை­யங்­க­ளுக்கு   செல்ல முடி­யாத நிலை காணப்­பட்­டது. அவ்வாறான  இடங்­க­ளிலும் படை­யினர் பட­குகள் மூலம் மாண­வர்­களை பரீட்சை மண்­ட­பங்­க­ளுக்கு கொண்டு சென்­றுள்­ளனர்.

மேலும் கன மழை­கா­ர­ண­மாக கிளி­நொச்சி மாவட்­டத்தில் 6841குடும்­பங்­களை சேர்ந்த 22262 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர் எனவும் இதில்  920 குடும்­பங்கள் 21 நலன்­புரி நிலை­யங்­களில் தங்­க­வைக்­கப்­பட்­டுள்­ளன என்றும்  மாவட்ட அனர்த்த முகா­மைத்­துவ நிலையம் அறி­வித்­துள்­ளது.

இதில் கரைச்சி பிர­தே­சத்தில் 182 குடும்­பங்­களும், பளையில்  ஒரு குடும்­பமும், கண்­டா­வ­ளையில் 714 குடும்­பங்­களும், பூந­க­ரியில் 23  குடும்­பங்­களும்  நலன்­புரி நிலையங்களில்  தங்­க­வைக்­கப்­பட்­டுள்­ளன.

அத்­தோடு கரைச்சி பிர­தே­சத்தில் 3147 குடும்­பங்­களும், பளையில்  252 குமும்­பங்­களும், கண்­டா­வ­ளையில் 3317 குடும்­பங்­களும், பூந­க­ரியில் 125 குடும்­பங்­களும்  பாதிக்கப்பட்டுள்ளன எனவும் அனர்த்த முகா­மைத்­துவ நிலையம் அறி­வித்­துள்­ளது.

முல்­லைத்­தீவு மாவட்­டத்­திலும்  அடை மழை கார­ண­மாக பல பகு­தி­களில் வெள்ளம் ஏற்­பட்­டுள்­ளது. இதனால் பெரு­ம­ள­வானோர் இடம்­பெ­யர்ந்து உற­வி­னர்­களின் வீடு­க­ளிலும் நலன்­புரி நிலை­யங்­க­ளிலும் தங்­கி­யுள்­ளனர்.

இதில் முல்­லைத்­தீவு புதுக்குடியிருப்புக்கு உட்பட்ட பகுதியில் 8899 குடும்­பங்­களை சேர்ந்த 28831பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ள நிலையில் 236  குடும்­பங்­களை சேர்ந்த 797 பேர்  நலன்­புரி நிலை­யங்­களில் தங்­க­வைக்­கப்­பட்­டுள்­ளனர். சில இடங்­களில் பாலங்கள் உடைப்­பெ­டுத்­த­மை­யினால் போக்­கு­வ­ரத்­துக்­களும் பாதிக்­கப்­பட்­டுள்­ளன.

அம்­பா­றையில்

அம்­பாறை மாவட்­டத்தின் பல பகு­தி­களில் கடந்த சில தினங்­க­ளாக பெய்­து­வரும் அடை­மழை கார­ண­மாக இதே வேளை, அம்­பாறை மாவட்­டத்தில் 39849  குடும்பங்பங்களைச் சேர்ந்த 132573 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர்.

நாவி­தன்­வெளி பிர­தேச செய­லகப் பிரி­வி­லுள்ள கல்­லோயா குடி­யேற்ற கிரா­மங்­க­ளையும், கல்­முனை நக­ரையும் இணைக்கும் கிட்­டங்கி வீதியின் மேலாக  வெள்ளம் பாய்­வ­தனால் போக்­கு­வ­ரத்துப் பாதிக்­கப்­பட்­டுள்­ளது. இதனால் குறித்த வீதி­யூ­டாக போக்­கு­வ­ரத்து மேற்­கொள்­வதில் பிர­தேச மக்கள் சிர­மங்­களை எதிர்­நோக்கி வருகின்றனர். தினமும் விவ­சா­யிகள், அலு­வ­லக உத்­தி­யோ­கத்­தர்கள், ஆசி­ரி­யர்கள், பொது­மக்கள் என ஆயி­ரக்­க­ணக்­கா­ன­வர்கள் நாளாந்தம் பய­ணிக்கும் இவ்­வீ­தியில் வெள்ளம் பாய்ந்து வரு­வதால் கல்­லோயா குடி­யேற்ற கிரா­மங்­க­ளி­லுள்ள சவ­ளக்­கடை அன்­ன­மலை, சொறிக்­கல்­முனை, 4ஆம், 5ஆம், 6ஆம், 12ஆம் கொள­னிகள், நாவி­தன்­வெளி போன்ற பிர­தேச மக்கள் பல்­வேறு கஸ்­டங்­க­ளுக்கு மத்­தியில் தமது அன்­றாட பய­ணங்­களை மேற்­கொண்டு வரு­கின்­றனர்  இவ் வீதிக்­கான நிரந்­தர பாலம் அமைக்­கு­மாறு நீண்­ட­கா­ல­மாக பிர­தேச மக்­க­ளினால் விடுக்­கப்­படும் கோரிக்­கையை இது­வ­ரைக்கும் எந்த அர­சாங்­கத்­தினால் நிறை­வேற்­றப்­ப­ட­வில்­லைஎன்பது  குறிப்­பி­டத்­தக்­கது.

மட்­டக்­க­ளப்பில்

தொடர்ச்­சி­யாக பெய்து வரு­கின்ற அடை­ம­ழை­யினால் மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்­திலே இது­வரை 9953 குடும்­பங்­களைச் சேர்ந்த 33288 பேர் பாதிப்­புக்­குள்­ளா­கி­யுள்­ளனர். நேற்று முதல் 8 இடைத்­தங்கல் முகாம்­களில் பாதிக்­கப்­பட்ட மக்­களை பாது­காப்­பாக தங்க வைக்­கப்­பட்­டுள்­ள­தாக மாவட்ட அர­சாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் தெரிவித்தார்.

நேற்று முதல் 8 முகாம்களில் தங்கவைக்கப்பட்ட மக்கள் கடந்த 24 மணித்தியாளங்களில் கிடைத்த அதிகமான மழைவிழ்ச்சி காரணமாக 18 முகாம்களில் அமைக்க வேண்டிய தேவை ஏற்பட்டு அங்கு மக்கள் அமர்த்தப்பட்டு அவர்களுக்கான அடிப்படை வசதிகள்,சமைத்த உணவுகள் ,குடிநீர் என்பனவும் வழங்கப்பட்டு வருகின்றது.

கிரான் பாலத்தை ஊடறுத்து வெள்ள நீர் பாய்வதனால் அங்கு மக்களின் போக்குவரத்துக்காக 5 இயந்திரப்படகுகள் சேவையில் ஈடுபட்டுவருவது குறிப்பிடத்தக்கது அப்பகுதியிலிருந்து கல்வி பயிலும் பொது சாதாரண தரப்பரீட்சைக்கு தோற்றும் 2 மாணவர்கள் இவ் இயந்திரப்படகுக்கூடாகவே தங்களின் பயணத்தை மேற்கொண்டு பரீட்சை எழுதிவருவது குறிப்பிடத்தக்கது .

இரணைமடு குளத்தின் நீர்மட்டம் அதிகரிப்பு – 12 வான் கதவுகள் திறப்பு!

கிளிநொச்சி இரணைமடு குளத்தின் நீர்மட்டம் வெகுவாக உயர்வடைந்துள்ள நிலையில் 12 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக வருகை தரும் நீரினால் இரணைமடு குளத்தின் நீர்மட்டம் இன்று காலை வாசிப்பின் பிரகாரம் 35.6 அங்குலமாக காணப்படுகின்றது.

தொடர்ந்தும் நீர் வருகை தருகின்றமையால் மேலும் வான் கதவுகள் உயர்த்தப்படும் சாத்தியம் காணப்படுகின்றது. நான்கு வான் கதவுகள் 01’00” அடியாகவும், இரண்டு வான் கதவுகள்  01′-06″ அடியாகவும், இரண்டு வான் கதவுகள்  02′-00″ அடியாகவும், இரண்டு வான் கதவுகள்  02′-06″ அடியாகவும், இரண்டு வான் கதவுகள் 00’06” அடியாகவும் திறந்து

விடப்பட்டுள்ளன. இரணைமடு குளத்தின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் அப்பகுதி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பொலிஸாரும் படையினரும் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளனர்.

வான் பாயும் பகுதியில் மக்கள் நெருக்கமாக சென்று பார்வையிடுவது தடை செய்யப்பட்டுள்ளது. அப்பகுதியில் விபத்துக்கள் இடம்பெறாமல் தடுக்கும் வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை பொலிஸாருடன் இணைந்து படையினரும் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

இரணைமடு குளத்திற்கு வருகை தரும் அதிக நீரினை வெளியேற்றுவது தொடர்பிலும், தற்போதைய காலநிலை மற்றும் பாதிப்புகள் தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று காலை கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த கலந்துரையாடலில் முக்கிய விடயங்களைப் பேசப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது,இதேவேளை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்ந்தும் பாதுகாப்பு அமைவிடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களிற்கான உணவு மற்றும் சுகாதாரம் உள்ளிட்டவற்றை மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முல்லைத்தீவு தண்ணிமுறிப்பு குளத்தின் மூன்று வான்கதவுகள் திறப்பு-  மக்களுக்கு எச்சரிக்கைமுல்லைத்தீவு தண்ணிமுறிப்பு குளத்தின் மூன்று வான்கதவுகள் மூன்று அடி அளவில் இன்று காலை ஆறு மணியளவில் திறக்கப்பட்டுள்ளன.

தண்ணிமுறிப்பு குளத்தின் நீரேந்து பகுதிகளில் தொடர்ச்சியாகப் பெய்து வரும் கன மழை காரணமாகக் குளத்திற்கு நீர் அதிகளவு வருவதனால் நீர் மட்டம் 21 அடியாக உள்ள நிலையில் மூன்று வான்கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன.

தண்ணிமுறிப்பு குளமானது 21 அடி வரை நீரைச் சேமிக்கக் கூடியதாக இருப்பினும் அதிகளவு நீர் வந்துகொண்டிருப் பதனால் 21 அடி நீர் மட்டத்தில் மூன்று வான்கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன. எனவே தண்ணிமுறிப்பு குளத்தின் வான் நீர் வெளியேறும் பகுதிகளில் வாழ்கின்ற பொதுமக்கள்  முன்னெச்சரிக்கையாக இருக்குமாறும் கோரப்பட்டுள்ளனர்.

இருப்பினும் இன்று அதிகளவிலான நீர் வெளியேறியதனால் அப்பகுதியில் விவசாய நடவடிக்கைக்குச் சென்றிருந்த விவசாயிகள் 11பேர் வரமுடியாமல் சிக்கியிருந்த நிலையில் இராணுவம், கடற்படை, பொதுமக்கள் போன்றோரின் ஒத்துழைப்புடன் படகு மூலம் சென்று குறித்த நபர்களை மீட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மன்னார் வட்டுப்பித்தான் மடு கிராமம் வெள்ளநீரில் மூழ்கியது :- 30 குடும்பங்கள் இடம்பெயர்வு

மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாகப் பெய்து வரும் கடும் மழை காரணமாக மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவிற்குட்பட்ட வட்டுப்பித்தான் மடு கிராம மக்கள் பாதிப்படைந்துள்ளனர்.

வட்டுப்பித்தான் மடு கிராமம் வெள்ள நீரில் மூழ்கியுள்ள நிலையில் குறித்த கிராமத்தைச் சேர்ந்த 30 குடும்பங்களைச் சேர்ந்த 120 பேர் இடம்பெயர்ந்து வெள்ளிக்கிழமை வட்டுப்பித்தான் மடு கிராம அபிவிருத்திச் சங்க மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த  மக்களுக்கான உணவு மற்றும் ஏனைய வசதிகளை மேற்கொள்ள மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் மன்னார் மாவட்டத்தில் 5 பிரதேசச் செயலாளர் பிரிவுகளிலும் வெள்ள பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது வரை 168 பேர் நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்றாஸ் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap