அதனைத்தொடர்ந்து நளினியும் உண்ணாவிரதம் மேற்கொண்டார். நீதிமன்ற உத்தரவின் பேரில் அவர்கள் உண்ணாவிரதத்தை கைவிட்டனர். இந்த நிலையில் தங்களை கர்நாடகா அல்லது வேறு மாநிலத்தில் உள்ள சிறைக்கு மாற்ற வேண்டும் என நளினி கோரிக்கை விடுத்தார். மேலும் தங்களுக்கு விடுதலை கிடைக்காததால் கருணைக்கொலை செய்யக்கோரியும் கடந்த மாதம் 28-ந்தேதி நளினி மனு கொடுத்தார்.
தொடர் உண்ணாவிரதம் காரணமாக இருவரின் உடல் நிலையும் மோசமானது. இதனால் அவர்களுடைய உடல் நிலையை வைத்தியர்கள் கண்காணித்து வருகின்றனர். உடல்நிலை மோசமானதை தொடர்ந்து நேற்று முன்தினம் இருவருக்கும் குளுக்கோஸ் ஏற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து 3-வது நாளாககவும் குளுக்கோஸ் ஏற்றப்பட்டது.
மேலும் அவர்களுக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு பரிசோதனை செய்யப்படுகிறது. தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருவதால் 64 கிலோ எடை இருந்த முருகனின் உடல் எடை தற்போது 20 கிலோ குறைந்து 44 கிலோவாக இருப்பதாக அவருடைய சட்டத்தரணி புகழேந்தி தெரிவித்தார். இந்நிலையில் வேலூர் பெண்கள் சிறையில் 10 நாட்களாக இருந்து வந்த உண்ணாவிரதத்தை நளினி இன்று மீளப் பெற்றார். ஆண்கள் சிறையில் இருந்த முருகன் கேட்டுக்கொண்டதை அடுத்து, நளினி உண்ணாவிரதத்தை மீளப் பெற்றுக்கொண்டார்.