அளுத்கம பிரதேசத்தில் ஊடகவியலாளர் ஒருவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. துஷித குமார என்னும் ஊடகவியலாளர் மற்றும் அவரது மனைவி மீதே இவ்வாறு கடும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
நேற்று (07) பிற்பகல் அளுத்கம, தர்கா நகரில் உள்ள அவரது வீட்டுக்கு சென்ற சிலர் அவரையும் அவரது மனைவியையும் கடுமையாக தாக்கியுள்ளதாகவும் தாக்குதலுக்கு உள்ளான இருவரும் அளுத்கம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பிரதேசத்தில் இடம்பெற்றுவந்த சட்டவிரோத வியாபாரங்கள் தொடர்பில் தகவல் வெளிப்படுத்தி வந்தமைக்காகவே இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில் இது தொடர்பில், அளுத்கம காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. #ஊடகவியலாளர் #தாக்குதல்