இலங்கை பிரதான செய்திகள்

யாழ் வண்ணான் குளத்திலிருந்து கொழும்பைச் சேர்ந்தவரின் சடலம் மீட்பு


யாழ்ப்பாணம், வண்ணான் குளத்தில் இருந்து கொழும்பைச் சேர்ந்த ஆண் ஒருவரின் சடலம் இன்று (08) காலை மீட்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் கொழும்பு கொழும்பைச் சேர்ந்த 60 வயது மதிக்கத்தக்க காட்டுப்பூச்சி என்ற பெயர் கொண்டவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது

குறித்த நபர் குடும்பத்தவர்களால் கைவிடப்பட்ட நிலையில் யாழ்ப்பாணத்திற்கு சென்று அங்கு தெரிந்தவர் ஒருவரின் வீட்டில் தங்கி இருந்துள்ளார்.

குளத்தில் சடலம் ஒன்று காணப்படுவது தொடர்பில் பிரதேச மக்கள் யாழ்ப்பாணம் காவல்துறையினருக்கு இன்று காலை தகவல் வழங்கியதை தொடர்ந்து குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ள நிலையில் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.  #யாழ்   #வண்ணான்குளம்  #சடலம்  #மீட்பு

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.