உயிர்த்தஞாயிறுத் தாக்குதல் தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் இடைக்கால அறிக்கை, எதிர்வரும் 22 ஆம் திகதி, ஜனாதிபதியிடம் கையளிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சர்வதேச பயங்கரவாதம் தொடர்பிலான விசேட நிபுணர், பேராசிரியர் ரொஹான் குணரத்ன, ஆணைக்குழுவின் அழைப்பினை ஏற்று நேற்றையதினம் ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளித்துள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதுவரை கொழும்பு பேராயர் பேரருட்திரு கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை உட்பட 20துக்கும் மேற்பட்டோர்; ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளித்துள்ளதாக ஆணைக்குழுவின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
மேலும் ஆணைக்குழுவுக்கு 106 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. #உயிர்த்தஞாயிறு #ஆணைக்குழு #இடைக்காலஅறிக்கை