Home இலங்கை திருகோணமலையில் ஆட்லறிக்குண்டு மீட்பு

திருகோணமலையில் ஆட்லறிக்குண்டு மீட்பு

by admin


திருகோணமலை – மூதூர் காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட மூதூர் வட்டம் பகுதியில் வாய்க்கால் நீரில் புதைந்து காணப்பட்ட சுமார் 20 கிலோகிராம் எடை கொண்ட ஆட்லறிக் ரக குண்டு ஒன்று இன்று காலை விசேட அதிரடிப்படையினரால் மீட்கப்பட்டுள்ளதாக, மூதூர் காவல்துறையினர்; தெரிவித்துள்ளனர்.

குறித்த வாய்க்காலில் சந்தேகத்துக்கிடமான முறையில் வெடிகுண்டு ஒன்று காணப்படுவதை அவதானித்த பிரதேசவாசிகள், மூதூர் காவல்துறையினருக்கு தகவல் வழங்கியுள்ளனர். இதனையடுத்து, காவல்துறையினரால் வழங்கப்பட்ட தகவலுக்கமைய   விசேட அதிரடிப்படையினர் குறித்த ஆட்லறிக் ரக குண்டினை மீட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. #திருகோணமலை  #ஆட்லறிகுண்டு  #மீட்பு

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More