சீனாவுடனான வர்த்தக போரை நிறுத்தி வைத்து அமெரிக்கா அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இன்று (ஞாயிற்றுக் கிழமை) அமுலுக்கு வரவிருந்த 15 சதவீத வரிவிதிப்பை ரத்து செய்து அமெரிக்கா அறிவிப்பு வெளியிட்டுள்ளதனையடுத்து இவ்வாவாறு வர்த்தக போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது
உலகின் இரு பெரும் பொருளாதார நாடுகளான அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே சுமார் 2 ஆண்டுகளாக வர்த்தக போர் இடம்பெற்றுவந்தநிலையில் இவ்வாறு போர்நிறுத்தம் ஏற்பட்டுள்ளது
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், சீனா நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளைப் பின்பற்றி வருவதாகவும், அமெரிக் காவின் அறிவுசார் சொத்துக்களையும், தொழில் நுட்பங்களையும் திருடி வருவதாகவும் குற்றம்சுமத்தி சீன பொருட்களுக்கு கூடுதல் வரிகளை விதித்து இரு தரப்பு வர்த்தக போரை ஆரம்பித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கிற வகையில், சீனாவும் அமெரிக்க பொருட்களுக்கு கூடுதல் வரி விதித்ததனைய:த்து இரு நாடுகளும் மாறி மாறி வரிகளை உயர்த்தி வந்தன.
இந்த வர்த்தக போர், உலகளாவிய பொருளாதார மந்த நிலைக்கு ஒரு காரணமாகவும் கூறப்பட்டநிலையில் இருநாடுகளும் இந்த வர்த்தக போரை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் ஒப்பந்தம் ஏற்படுத்திக்கொள்ள ஒப்புக்கொண்டு பேச்சுவார்த்தை நடத்தி வந்தன.
இந்த நிலையில் முதல் கட்ட ஒப்பந்தம் இரு நாடுகள் இடையே ஏற்பட்டுள்ளதனால் இன்று 15ம் திகதி அமுலுக்கு வரவிருந்த சீன பொருட்கள் மீதான 15 சதவீத அமெரிக்க வரி விதிப்பு ரத்தாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது. #அமெரிக்கா #சீனா #வர்த்தகபோர்நிறுத்தம்