ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் தற்கொலை வழக்கின் விசாரணை சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது. சென்னை ஐஐடியில் தங்கிப் படித்து வந்த கேரளாவைச் சேர்ந்த மாணவி பாத்திமா லத்தீப் கடந்த 9ஆம் திகதி தற்கொலை செய்துகொண்டிருந்தார்.
பாத்திமா லத்தீப் இறப்பதற்கு முன்னதாக ஐஐடி பேராசிரியர்கள் சுதர்சன் பத்மநாபன், ஹேமச்சந்திர காரா, மிலிந்த் பிரம்மம் ஆகிய மூன்று பேரும்தான் தனது தற்கொலைக்கு காரணம் என தனது கைபேசியில் குறிப்பு எழுதி வைத்திருந்தார். இதுதொடர்பாக மத்திய குற்றப் பிரிவு காவல்துறையினர்; விசாரணை நடத்திவந்த நிலையில் தனது மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், அதனை சிபிஐ விசாரிக்க வேண்டுமெனவும் வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடி, உள் துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை பாத்திமா லத்தீபின் தந்தை நேரில் சந்தித்து வலியுறுத்தினார்.
ஆத்துடன் பாத்திமா தற்கொலை வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் இவ்வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம், சிபிஐ விசாரணைக்கு மாற்றுவது தொடர்பாக தமிழக அரசு முடிவெடுக்கலாம் என அறிவுறுத்தியது.
இந்த நிலையில் டிஜிபி திரிபாதியின் அறிவுறுத்தலின் பேரில், பாத்திமா லத்தீப் தற்கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றி தமிழக அரசு இன்று (டிசம்பர் 15) உத்தரவிட்டுள்ளது. இதனை சென்னை மாநகர ஆணையர் ஏ.கே.விஸ்வநாதனும் உறுதிப்படுத்தியுள்ளார். #பாத்திமாலத்தீப் #தற்கொலை #சிபிஐ #ஐஐடிமாணவி