“வடமாகாணத்திற்கு ஆளூநர் ஒருவரை இன்னமும் நியமிக்க முடியாம திணறிக்கொண்டு இருக்கின்ற ஒரு ஜனாதிபதியையே நங்கள் பார்க்கின்றோம். இவ்வாறாக எமது பல விடயங்களில் தினறிக்கொண்டு இருக்கின்றார்.” என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.
யாழில்.இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது கருத்து வெளியிட்ட அவர், வடமாகாண நிர்வாகங்கள் சரியான முறையில் நடைபெற முடியாது முன்னேற முடியாத சூழ்நிலை காணப்படுகின்றது ஆளூநர் நியமனம் உடனடியாக செய்யப்பட வேண்டும். முதலில் அவர் ஆளுனர் ஒருவரை நியமிக்கட்டும். என தெரிவித்தார்.
அதன் போது ஊடகவியலாளர் ஒருவர், கூட்டமைப்பு ஒருவரை பரிந்துரை செய்ததாகவும் அதனை பிரதமர் ஏற்றுக்கொண்ட போதும், ஜனாதிபதி அவரை ஏற்றுக்கொள்ளாது அவரை நியமிக்க முடியாது எனக் கூறியதாக இணையங்களில் வெளி வந்த செய்திகள் தொடர்பில் கேட்டகப்பட்ட போது, இணையங்களில் வரும் செய்திகள் தொண்ணூறு வீதமானவை பொய்யானவை ஆனால் இந்த செய்தி நூற்றுக்கு நூறு வீதமும் பொய்யானது. அதில் எந்த விதமான உண்மையும் இல்லை என தெரிவித்தார்.