Home இலங்கை மாற்று தலைமைக்கான போட்டி – சங்கரிக்கு வரலாறு தெரியாது – மணல் கொள்ளை- ஜனாதிபதி பதில் கூற வேண்டும்…

மாற்று தலைமைக்கான போட்டி – சங்கரிக்கு வரலாறு தெரியாது – மணல் கொள்ளை- ஜனாதிபதி பதில் கூற வேண்டும்…

by admin
மாற்று தலைமைக்கான போட்டி, அடிபிடி அதிகமாகி வருகின்றது. விரைவாக அவர்களில் யார் மாற்று தலைமை என  ஒரு முடிவுக்கு வர வேண்டும்  என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.
யாழில்.இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில் ,
பிளவுகள் வருவது விரும்பத்தக்கது அல்ல. ரெலோ இரண்டாக பிரிந்தது என்பது தவறு அதனை நான் ஏற்றுகொள்ள மாட்டேன். ரெலோவில் இருந்து இருவர் பிரிந்து சென்றனர். அவர்கள் சுயாதீனமாக பிரிந்து செல்ல முடியும். ஏன் பிரிந்து சென்றீர்கள் என கேட்டால் அவர்களுக்கு அதற்கு பதில் இல்லை. ஆகையால் அவர்களுக்கு அறிவுரை சொல்ல விரும்பவில்லை.
நாங்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என நான் கேட்டதற்கு , நாங்கள் ஒற்றுமையாக வர விரும்பவில்லை என பதில் சொன்னால் போதும் . ஆனால் அதற்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு வியாக்கியானம் சொல்லிக்கொண்டு இருக்கின்றார்கள்.
மாற்று தலைமைக்கான போட்டி அடிபிடி முதலில் முடிவுக்கு வர வேண்டும். வெளியே எட்டோ பத்து கட்சிகள் இருந்து கொண்டு அனைவரும் மாற்று தலைமை என கூறிக்கொள்கின்றார்கள். முதலில் அவர்களில் யார் மாற்று தலைமை என  ஒரு முடிவுக்கு வரட்டும் என தெரிவித்தார்.

ஜனாதிபதி பதில் கூற வேண்டும்

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் பிரச்சனை அரசியல் மயப்படுத்தப்பட்டது என கூறி தப்பிக்க முடியாது. அதற்கு நாங்கள் அனுமதிக்கமாட்டோம். அதற்கு நிச்சயம் ஜனாதிபதி பதில் சொல்லியே ஆக வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

யாழில்.இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில் ,

தற்போதைய ஜனாதிபதி பாதுகாப்பு செயலாராக இருந்த போது, யுத்தத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் பொறுப்பு கூற வேண்டிய முழு பொறுப்பும் அவரையே சாரும்.

யுத்த காலத்தில் பலர் காணாமால் ஆக்கப்பட்டவர்கள் ஒரு பகுதியினர். ஆனால் யுத்தம் முடிவடைந்த பின்னர் அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டமையை நம்பி தமது உறவுகளை அரசாங்க படைகளிடம் பாரம் கொடுத்தவர்கள் ஒரு பகுதியினர் அவர்கள் காணாமல் போனவர்கள் அல்ல , படையினரிடம் கையளிக்கப்பட்டவர்கள் அவர்களுக்கு என்ன நடந்தது என்பது தெரியாத சூழ்நிலை உள்ளது.

அந்த கேள்வியினை கோட்டாபய ராஜபக்சேவிடம் கேட்ட போது , அதற்கு பதில் அளிக்காமல் மழுப்பினார். எதிர்காலத்தை பார்ப்போம் என்றார். அதற்கு அவர் பதில் சொல்லியே ஆக வேண்டும் அரசியல் மயப்படுத்துவது என்பது வேறு விடயம்.

நாங்கள் கேட்கும் கேள்வி உங்களிடம் சரணடைந்தவர்கள் எங்கே ? கையளிக்கப்பட்டவர்கள் எங்கே ? என்பதே இதற்கு பதில் அளிக்காமல் , அரசியல் மயப்படுத்தப்பட்டது என கூறி தப்பிக்க நாங்கள் அனுமதிக்க மாட்டோம். என மேலும் தெரிவித்தார்.

ஈழ அகதிகள் அனைவரும் நாடு திரும்ப வேண்டும்

இந்தியாவில் உள்ள ஈழ அகதிகள் அனைவரும் இந்த நாட்டில் இருந்து துரத்தப்பட்டவர்கள். அவர்கள் இங்கே மீண்டும் வந்து குடியேற வேண்டும். என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

யாழில்.இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில் ,

இந்தியாவில் நிறைவேற்றும் சட்டம் எப்படி இருக்க வேண்டும் என நான் கருத்து கூற முடியாது. அது இந்தியா தனது நலன் கருதி கொண்டுவரப்படும் சட்டங்கள்.

இங்கிருந்து சென்றவர்கள் மீண்டும் இங்கே வர வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு. இந்தியாவில் தொடர்ந்து அவர்கள் தங்கியிருக்க வேண்டும் எனும் நிலைப்பாடு அவர்களுக்கு இருந்தால் சர்வதேச சட்டத்தின் கீழ் அதனை சுயாதீனமாக தெரிவு செய்யும் உரிமை அவர்களிடம் உண்டு.

எண்களின் விருப்பம் என்னவெனில் அவர்கள் அனைவரும் இலங்கையர்கள் இந்த நாட்டில் இருந்து துரத்தப்பட்டவர்கள். அவர்கள் இங்கே மீண்டும் வந்து குடியேற வேண்டும்.

குடியேற வந்தவர்களுக்கு வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை. நாங்கள் ஆதரவு தெரிவித்த அரசாங்கம் கூட அதனை செய்ய தவறி இருந்தது. ஆனாலும் அவர்களுக்கான உதவிகளை செய்வதற்கு பல முயற்சிகளை நாங்கள் முன்னெடுத்திருந்தோம்.

நாடு திரும்புவர்கள் வாழ்வதற்கான வசதிகளை மாத்திரம் செய்து கொடுக்காது அவர்களின் வாழ்வாதாரத்திற்கும் உதவிகளை செய்வதற்கு தொடர்ந்தும் நாங்கள் வலியுறுத்துவோம். என தெரிவித்தார்.

ஆனந்தசங்கரிக்கு கூட்டணியின் வரலாறு தெரியாது…

தமிழர் விடுதலை கூட்டணியின் வரலாற்றை சாட்சி கூண்டில் நின்ற வீ. ஆனந்தசங்கரிக்கு நானே எடுத்துக்கூறினேன். என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

யாழில்.இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில் ,

தமிழர் விடுதலை கூட்டணிக்கு எதிராக 2003ஆம் ஆண்டு அவர் முன் வைத்த வழக்கில் வழக்காளியாக அவர் சாட்சியம் அளிக்கும் போது , , நான் அவரை குறுக்கு விசாரணை செய்தேன்.

அப்போது, தமிழர் விடுதலை கூட்டணியின் ஆரம்ப தலைவர்கள் யார் என நான் கேட்ட போது , இரண்டு தலைவர்கள் என பதில் அளித்தார்.

நான் அதனை திருத்தி மூன்று தலைவர்கள் என கூறினேன். அவர் வரலாற்றை தவறாக சொன்னதை சுட்டிக்காட்டினேன். அவர் அந்த தவறை ஏற்றுக்கொண்டமை பதிவில் உண்டு.

அந்த கோபம் அவருக்கு விட்டுப்போகாததால் எனக்கு வரலாறு தெரியாது என கூறுகின்றார். அவர் வயது முதிர்ந்தவர் எனக்கு பேரன் முறையானவர். அவருடன் மல்லுக்கட்ட நான் விரும்பவில்லை. அவருக்கு ஞாபக மறதியும் அதிகம். என தெரிவித்தார்.

மணல் கொள்ளை

புதிய அரசாங்கம் வந்த கையேடு மீண்டும் மணல் கொள்ளை தலையெடுத்துள்ளது. அதற்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளேன் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

யாழில்.இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில் ,

பல இடங்களில் மணல் கொள்ளை நடைபெறுகின்றது புதிய அரசாங்கம் வந்த கையேடு மீள மண் கொள்ளை தலையெடுத்துள்ளது.

வடமராட்சி கிழக்கில் கடந்த மகிந்த ராஜபக்சே ஆட்சி காலத்தில் மண் கொள்ளை மிக மோசமாக நடந்திருந்தது. அது தொடர்பில் வழக்கு தொடர்ந்து சாதகமான தீர்ப்பினையும் பெற்றுக்கொண்டோம். அக்கால பகுதியில் மகேஸ்வரி நிதியம் எனும் பெயரில் பாரிய மணல் கொள்ளை நடைபெற்றது. அப்படியான செயல் இப்ப மீளவும் ஆரம்பித்துள்ளது. நான் சில இடங்களுக்கு நேரில் சென்று பார்த்திருக்கிறேன் அதனடிப்படையில் மிக விரைவில் அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்போம். என மேலும் தெரிவித்தார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More