முன்னாள் ஜனாதிபதியின் அலுவலக பிரதானி பேராசிரியர் ஐ.எம்.கே மஹானாமவுக்கு 20 ஆண்டு கடூழிய சிறைத் தண்டனையும், 65,000 ரூபா அபரதமும் விதிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை மரக்கூட்டுத் தாபனத்தின் முன்னாள் தலைவர் பி.திசாநாயக்கவுக்கு 12 ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனையும் 55,000 ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. கொழும்பு நிரந்தர நீதாய மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்றம் இன்று (19.12.19) இந்த உத்தரவினை வழங்கியுள்ளது
கடந்த 2018 ஆம் ஆண்டு இந்திய நிறுவனம் ஒன்றிடமிருந்து 02 கோடி ரூபா இலஞ்சம் பெற்ற குற்றத்திற்காக ஜனாதிபதி செயலகத்தின் பிரதானி பேராசியர் ஐ.எம்.கே. மஹானாம மற்றும் அரச மரக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் பி. திசாநாயக்க ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு இருவரும் குற்றப்பத்திரிக்கை கையளிக்கப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது #ஜனாதிபதிசெயலணி #கடூழியசிறை #மஹானாம # திசாநாயக்க