அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பை பதவி நீக்குவது தொடர்பாக இடம்பெற்ற குற்றப்பிரேரணை வாக்கெடுப்பில் டிரம்ப் தோல்வியடைந்துள்ளார். குற்றப்பிரேரணைக்கு ஆதரவாக 230 வாக்குகளும் எதிராக 197 வாக்குகளும் கிடைக்கப்பெற்றுள்ளன.
மக்கள் பிரதிநிதிகள் சபையில் குற்றப்பிரேரணையை வெற்றிகொள்ள வேண்டுமாயின் 216 வாக்குகளை பெறுவது அவசியம் என்னும் நிலையில் ஜனாதிபதி பதவியில் டிரம்ப் நீடிப்பாரா, இல்லையா என்பது குறித்து தீர்மானிக்கும் செனட் சபையின் விசாரணைகள் அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ளன.
அதிகாரங்களை துஷ்பிரயோகம் செய்தமை , காங்கிரஸின் நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தியமை ஆகிய குற்றச்சாட்டுகள் டொனால்ட் டிரம்ப் மீது சுமத்தப்பட்டுள்ளன. அமெரிக்காவின் உளவுப்பிரிவைச் சேர்ந்த ஒருவர், டிரம்ப் உக்ரைன் நாட்டை சேர்ந்த அரசியல் தலைவரான ஜெலன்ஸ்கியுடன் தொலைப்பேசி உரையாடல் மேற்கொண்டதாக முறைப்பாடு செய்யப்பட்டிருந்து.
இதன்மூலம் முன்னாள் துணை அதிபர் ஜோ பைடனுக்கு எதிராக விசாரணைகளை முன்னெடுத்து அவரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் உக்ரைனுக்கு அழுத்தம் கொடுத்ததாக டிரம்புக்கு எதிராக குற்றச்சாட்டு வைக்கப்படடிருந்தமை குறிப்பிடத்தக்கது #குற்றப்பிரேரணை #வாக்கெடுப்பில் #டிரம்ப் #தோல்வி ,#மக்கள்பிரதிநிதிகள்சபை