பிரதமர் வேட்பாளராக செயற்பட வேண்டுமாயின் எந்தவித நிபந்தனைகளும் அற்ற வகையில் கட்சித் தலைமைப் பதவி வழங்கப்பட வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச பண்டாரகமயில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், “ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்ட சந்தர்ப்பத்தில் மக்களின் விரும்பம் அதிகாரிக்க அதிகரிக்க பல்வேறு நிபந்தனைகளுடன் பயணிக்க வேண்டி ஏற்பட்டது. அந்த நிபந்தனைகளை நிறைவேற்ற வேண்டுமாயின் கட்சித் தலைவர் பதவி முக்கியமானது.
பிரதமர் வேட்பாளர் என்றார் தேர்தலை நடவடிக்கைகளை முன்னெடுக்க கூடிய அதிகாரம் வழங்கப்பட வேண்டும், அதற்கு உட்பட்ட செயற்பட கட்சித் தலைமைத்துவம் மிகவும் முக்கியமானது.
நான் பிரதமர் வேட்பாளராக செயற்படும் போது சிறிகொத்தாவிற்கு பூட்டு போட்டால் என்ன நடக்கும்? அதன்மூலம் நான் ஒரு அதிகாரமில்லாத பிரதமர் வேட்பாளராவேன். எனவே, அந்த கொம்பு வைத்த கீரிடத்தை சூடிக்கொள்ள நான் விரும்பவில்லை. பதவிகளுக்காக யார் பின்னாலும் செல்ல போவதில்லை. பதவிகளை கேட்டு யாத்திரிகளை முன்னெடுப்பதும் இல்லை.
ஒன்றரை மாதங்கள் எனக்கு ஜனாதிபதி வேட்பாளர் பதவியை வழங்காது இழுத்தடித்தனர். அந்த காலப்பகுதியில் என்னை எதிர்த்து போட்டியிட்ட போட்டியாளர் 2 சுற்று பிரச்சாரத்தை முடித்து நான் ஆரம்பிக்கும் போது அவர் மூன்றாம் கட்ட பிரச்சாரத்தையும் ஆரம்பித்திருந்தார்” எனக் குறிப்பிட்டுள்ளார்.