நாட்டின் தேசிய பிரச்சினைகளை திசைத்திருப்பவும் சர்வாதிகார ஆட்சியை முன்னெடுக்கவுமே தீவிர அரசியல் பழிவாங்கல்களில் தற்போதைய அரசாங்கம் ஈடுப்படுப்படுகின்றது. சம்பிக ரணவகவின் கைது உள்ளிட்ட விடயங்கள் குறித்து கலந்துரையாட நாளை சபாநாயகரை சந்திக்க தீர்மானித்துள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஆசுமாரசிங்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் முதல் சிம்மாசன பிரசங்கம் ஜனவரி மாதம் 3ம் திகதி இடம் பெற்றதை தொடர்ந்து நாடாளுமன்ற கூட்டத்தொடரை ஒத்திவைப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்கின்றது.
இது முற்றிலும் ஜனநாயகத்திற்கு முரணானதாகும். நாடாளுமன்றத்தை கூட்டும் அதிகாரத்தை எதிர்தரப்பினருக்கு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டது. இதன் போது உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்தார்.
இடைக்கால அரசாங்கத்தின் முறையற்ற செயற்பாடுகளை மறைப்பதற்காகவும் மக்களின் கவனத்தை திசைத்திருப்புவதற்காகவுமே நீதிமன்றத்தினால் நிறைவுப்பெற்ற வீதி விபத்து வழக்கிற்கு அரசாங்கம் முக்கியத்துவம் கொடுத்து நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவை கைது செய்துள்ளது.
கைது செய்வதற்காக காவற்துறையினர் முன்னெடுத்த வழிமுறைகள் முற்றிலும் தவறானது. அரசாங்கத்தின் அரசியல் பழிவாங்களுக்கு ஒத்திசையும் வகையிலே இன்று முக்கிய தரப்பினர்கள் செயற்படுகின்றார்கள்.
பொதுத்தேர்தல் இடம் பெறவுள்ள தருணத்தில் எதிர்தரப்பின் பலரை கைது செய்து 2015ம் ஆண்டுக்கு முற்பட்ட காலத்தில் நாட்டில் காணப்பட்ட சர்வாதிகார நிர்வாக முறைமையினை முன்னெடுத்து செல்ல முறையற்ற விதத்தில் அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது.
நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை கைது செய்யும் போது நாடாளுமன்ற கோட்பாடுகளுக்கு அமைய பாரம்பரியமாக கடைப்பிடிக்க வேண்டிய விடயங்களை அரசாங்கம் கடைப்பிடிக்கவில்லை என்று சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார். ஆகவே இவ்விடயம் தொடர்பில் இன்று சபாநாயகரை சந்தித்து தீர்க்கமான தீர்மானங்களை மேற்கொள்வோம் என அவர் தெரிவித்தார்.