134
மன்னாரில் சட்ட விரோத மண் அகழ்விற்கு எதிராக தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் எதிர் வரும் வெள்ளிக்கிழமை காலை 9.30 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளனர்.
மன்னார் மாவட்டத்தில் கனிய வளங்களை சட்ட விரோதமாக அதிகாரிகளின் துணையுடன் இரவு பகலாக அபகரித்து வெளி மாவட்டங்களுக்கு கொண்டு செல்லுகின்றனர்.
இதனை தடுக்கும் நோக்கில் இடம் பெறவுள்ள கண்டன கவனயீர்ப்பு போராட்டத்தில் அனைத்து சமூக நல சூழலியல் ஆர்வளர்களையும் கலந்து கொள்ளுமாறு தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கம் அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. #மன்னார் #சட்டவிரோத #மண்அகழ்விற்கு #போராட்டம்
Spread the love