245
இயேசு பாலனின் பிறப்பை குறிக்கும் நத்தார் பண்டிகைக்கான நள்ளிரவு ஆராதனைகள் மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் பலத்த பாதுகாப்புகளுக்கு மத்தியில் சிறப்பாக இடம் பெற்றது. -நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 11.45 மணிக்கு மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தலைமையில் குருக்கள் இணைந்து திருநாள் திருப்பலியை கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுத்தனர்.
இதன் போது பல்லாயிரக்கணக்கான கத்தோலிக்கர்கள் திருநாள் திருப்பலியில் பங்கெடுத்துள்ளனர். -மன்னார் புனித செபஸ்தியார் பேராலய பகுதியை சுற்றி முப்படையினர் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டதோடு,பாதுகாப்புக்கு மத்தியில் மிகவும் அமைதியான முறையில் நள்ளிரவு ஆராதனை இடம் பெற்றது.
இதே நேரம் மன்னார் மறைவாட்டத்தில் உள்ள அனைத்து பங்குகளில் உள்ள ஆலயங்களிலும் விசேட ஆராதனைகள் இடம் பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. #பாதுகாப்பு #மன்னார் #நத்தார்
Spread the love