பேராசிரியர் டபிள்யூ.டி.லக்ஷ்மன் ஒரு பல்கலைக்கழக கல்வியியலாளராக இருக்கலாம். ஆனால் சுமார் எண்பது வயதை அண்மித்த ஒருவரை மத்திய வங்கியின் ஆளுநராக நியமிக்க வேண்டுமா என்று முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர கேள்வி எழுப்பியிருக்கிறார்.
இலங்கை மத்திய வங்கியின் புதிய ஆளுநராக தேசமான்ய பேராசிரியர் டபிள்யூ.டி.லக்ஷமன் நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து அவருக்கான நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டிருந்தார்.
இந்நிலையில் மத்திய வங்கி ஆளுநராக பேராசிரியர் லக்ஷ்மன் நியமிக்கப்பட்டமை தொடர்பில் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் மங்கள சமரவீர செய்திருக்கும் பதிவிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டிருக்கிறார்.