Home இலங்கை யாழ் பல்கலைக்கழக பிரதம நூலகர் சிறிகாந்தலட்சுமி காலம் ஆனார்…

யாழ் பல்கலைக்கழக பிரதம நூலகர் சிறிகாந்தலட்சுமி காலம் ஆனார்…

by admin

யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தின் பிரதம நூலகர் (chief Librarian), இலங்கை நூலகசங்க வரலாற்றில் தெரிவுசெய்யப்பட்ட முதலாவது தமிழ்தலைவர் (SLLA-Srilanka Library Association) திருமதி சிறிகாந்தலட்சுமி அருளானந்தம்    தனது 59அவது வயதில் இன்று (25.12.19) மாரடைப்பு ( Heart Attack) காரணமாக காலமானார்.

இணுவிலில் பிறந்த சிறீகாந்தலட்சுமி மருதனார்மடம் இராமநாதன் கல்லூரியில் பயின்று யாழ் பல்கலைக்கழகத்தில் பொருளியல் பட்டதாரியானார். பெங்களுரில் தகவல் அறிவியல், ஆவணப்படுத்தலில் பட்ட பின்படிப்பினை மேற்கொண்டுள்ளார்.

பத்தி எழுத்தாளர், கவிஞர், நூல் விமர்சகர், என பலதுறைகளில் சிறந்து விளங்கிய அவர் பெண்ணியல் சிந்தனையாளராகவும் செயற்பாட்டாளராகவும் விளங்கியிருந்தார்.

நூலகத்துறைசார்ந்து

  • தகவல் வளங்களும் சேவைகளும் (குமரன் புத்தக நிலையம்)
  • தகவல்வள முகாமைத்துவம் (குமரன் புத்தக நிலையம்)
  • நூலக அபிவிருத்தி : ஒரு பயில்நோக்கு (சேமமடு)
  • அகரவரிசை-பகுப்பாக்கக் கலைச்சொற்தொகுதி (குமரன் புத்தக நிலையம்)
  • சொற்கருவூலம்: உருவாக்கம் பராமரிப்பு பயன்பாடு (நூலக விழிப்புணர்வு நிறுவகம்)
  • நூலகப் பகுப்பாக்கம் நூலகர் கைநூல்
  • நூலக தகவல் அறிவியல் ஆய்வுக் கோவை

உள்ளிட்ட நூல்களையும் எழுதியுள்ளார்.

அத்துடன் தமிழர் பாரம்பரிய பாவனைப்பொருட்களை சேமித்து தன்னுடைய வீட்டில் சிறிய அளவிலான ஆவணக் காப்பகத்தையும் பேணிவந்ததாககவும், பாரம்பரிய ஆவணங்களை சிறார்களுக்கு கண்காட்சிகள் ஊடாக காட்சிப்படுத்துவதிலும் அக்கறை காட்டி வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

விடுதலைப் போராட்டத்தில் பெண்போராளிகளின் கல்விசார் நடவடிக்கைகளிலும், அவர்களின் படைப்பியல் சார் துறை வளர்ச்சியிலும் பங்காற்றியவர்களில் ஒருவராகவும் விளங்கிய சிறீகாந்தலட்சுமி வானதி பதிப்பகத்தின் ஊடாக பல நூல்களை வெளியிட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

//பெரிதாக எதுவுமில்லை. பிறந்தது கிராமியச் சூழலில். தற்போது விரும்புவதும் அதைத் தான். நான் நடந்து வந்த பாதை கற்களும் முட்களும் நிரம்பியது. ஆரம்பத்தில் வலியை ஏற்படுத்திய போதும் வாழ்க்கை பற்றிய எத்தனையோ அனுபவங்களைக் கற்றுக் கொடுத்தது.. அப்பாவிடம் இருந்து பெற்றுக்கொண்ட மனங்களை நேசிக்கும் குணம் தான் எனது அத்தனை நகர்வுகளையும் திட்டமிடுகின்றது. போர்வைகளைப் போர்த்திக் கொள்வதில் எனக்கு நாட்டமில்லை. நான் நானாகவே இருக்க விரும்புகின்றேன் இன்றைய உலகில் அது சாத்தியப்படாது என்பது தெரிந்தபோதும்.! எழுத்துக் கூட நான் விரும்பி ஏற்றுக்கொண்டதோ அல்லது நானாகவே திட்டமிட்டதோ அல்ல. ! சூழல் என்னை எழுத நிர்ப்பந்தித்தது என்பது தான் உண்மை. இலக்கிய வடிவங்களுக்குக் கரு தேடுவது எனது நோக்கமில்லை. கருவுக்குப் பொருத்தமான வடிவத்தைத் தேடுவதால் தான் கவிதை, கதை, கட்டுரை, விவரணப்படங்கள் என எனது வடிவங்கள் மாறுகின்றது. அனைத்திலும் தடம் பதிக்க வேண்டும் என்ற எண்ணமும் என்னிடம் இல்லை. இன்றைய நிகழ்வுகள் எதிர்கால சமூகத்துக்குப் போய்ச் சேரவேண்டும் என்ற தாகம் தான் எழுத்தால் பாராட்டுக்களைப் பெறுவதைவிடவும் கூடியவரை நிகழ்வுகளை ஆவணப்படுத்தவேண்டும் என்ற தாகத்தை ஏற்படுத்துகின்றது.//

– நூலகர் சிறீகாந்தலட்சுமி அருளானந்தம்..

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More