Home இலங்கைபருத்தித்துறையில் இரு கிராமங்களுக்கு இடையில் மோதல் -இராணுவத்தினர் களமிறக்கப்பட்டனர்

பருத்தித்துறையில் இரு கிராமங்களுக்கு இடையில் மோதல் -இராணுவத்தினர் களமிறக்கப்பட்டனர்

by admin

பருத்தித்துறையில் கொட்டடி மற்றும் முனை ஆகிய இரு கிராமங்களைச் சேர்ந்த சிலருக்கு இடையே ஏற்பட்ட மோதல் இரண்டு கிராமங்களுக்கு இடையிலான மோதலாக மாறியுள்ளது. இரண்டு கிராம மக்களும் மோதிக் கொண்டதில் பலர் காயமடைந்துள்ளதுடன் அப் பிரதேசங்களில் தரித்து நின்றிருந்த வாகனங்களும் அடித்து சேதமாக்கப்பட்டுள்ளன. இந்தச் சம்பவம் நேற்று (25) மாலை இடம்பெற்றது என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

படுகாயமடைந்தவர்களில் ஐவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவ்வாறு இரண்டு கிராம மக்களும் மாறி மாறி மோதலில் ஈடுபட்டதால் அப் பிரதேசமே களோபரமானதாகக் காணப்பட்டது. இதனையடுத்து சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை காவல்துறையினருக்கு தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் வந்திருந்த போதும் மோதலைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

“இரு கிராமங்களுக்கு இடையே மோதல் நிலமைகள் நீடித்ததால் இராணுவத்தினர் களமிறக்கப்பட்டனர். இதன் பின்னர் மோதல் சம்பவம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. பழைய பகை ஒன்று இருந்ததாகவும் மதுபோதையில் சிலர் அதனைப் பெரிதுபடுத்தியதால் இந்த மோதல் இடம்பெற்றது” என்றும்   காவல்துறையினர் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை  காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்  #பருத்தித்துறை  #கிராமங்களுக்கு  #மோதல் #இராணுவத்தினர்   #கொட்டடி  #முனை

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More