217
மன்னாரிலும் தென்பட்டது கங்கண சூரிய கிரகணம்
சுமார் 10 வருடங்களின் பின்னர், இன்று வியாழக்கிழமை (26) இலங்கையில் பல்வேறு மாவட்டங்களில் ‘கங்கண சூரிய கிரகணம்’ ஏற்பட்டது. இன்று வியாழக்கிழமை (26) காலை 8.09 மணியிலிருந்து முற்பகல் 11.21 வரை இந்த சூரிய கிரகணம் ஏற்பட்டது. குறித்த சூரிய கிரகணம் மன்னார் மாவட்டத்திலும் ஏற்பட்டது.
குறித்த சூரிய கிரகணத்தை பொது மக்கள் பார்வையிடுவதற்கான ஏற்பாடுகள் மற்றும் ஆய்வுகளை மன்னாரில் வானியலாராய்ச்சி திணைக்களத்தின் ஆதர் சி கிளாக் நிறுவனம் மேற்கொண்டது.
மன்னாரில் தனியார் விடுதி ஒன்றின் பார்வையளர் அரங்கில் குறித்த அய்வுகள் இடம் பெற்றது.
இதன் போது பல பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளடங்களாக நூற்றுக் கணக்கானவர்கள் குறித்த சூரிய கிரகணத்தை பாதுகாப்பான முறையில் பார்வையிட்டமை குறிப்பிடத்தக்கது.
சூரிய கிரகணம் கிளிநொச்சியிலும் தென்பட்டது
சூரிய கிரகணம் இன்று கிளிநொச்சியிலும் தென்பட்டது. கொழும்பு ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் கிளிநொச்சியில் சூரிய கிரகணத்தை மக்கள் காணக்கூடிய வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டன. இரணைமடு சந்தியில் குறித்த சூரிய கிரகணத்தை மக்கள் காணக்கூடிய வகையில் பல்கலைக்கழக மாணவர்களால் வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டது, சூரிய கிரகணத்தை முழுமையாக காணக்கூடியவாறு இன்றையகாலநிலை காணப்பட்டமை குறிப்பிடதக்கதாகும். சுற்றுலா பிரயாணிகள் பிரதேச மக்கள் என பலரும் சூரிய கிரகணத்தை நேரில் பார்வையிட்டிருந்தமை குறுிப்பிடதக்கதாகும்.
மலையக பகுதியில் சூரிய கிரணத்தை மக்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டனர்
க.கிஷாந்தன்)
மலையக பகுதியில் சூரிய கிரணத்தை மக்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டமையை காணக்கூடியதாக இருந்தது. இவ்வேளையில் காலை 09.35 மணியளவில் அட்டன் நகரம் உட்பட பல பகுதியில் சற்று இருள் சூழ்ந்த நிலையில் இருந்தது. இச்சந்தர்ப்பத்தில் சூரியனின் ஒரு பகுதி இருள் சூழ்ந்து காணப்பட்டதாக பார்வையிட்ட மக்கள் தெரிவித்தனர். #சூரிய கிரகணம் #இலங்கை
Spread the love