155
கிளிநொச்சி, மலையாளபுரம், புதுஐயன்குளத்தின் அணைக்கட்டின் கீழ் பகுதியில் பலத்த வெட்டுக்காயங்களுடன் ஆணொருவரின் சடலம் நேற்று (30) இரவு மீட்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மலையாளபுரத்தைச் சேர்ந்த 38 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான முனியாண்டி விக்கினேஸ்வரன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். #கிளிநொச்சி #வெட்டுக்காயங்கள் #ஆணின் #சடலம்
Spread the love