வடமாகாணத்தில் கடமையாற்றும் தமிழ் காவல்துறை உத்தியோகஸ்தர்களை ஒரே நாளில் இடமாற்றம் செய்யப்பட்டமை பழிவாங்கல் நடவடிக்கை எனவும் , அதனை ஜனாதிபதி மற்றும் பிரதமரின் கவனத்திற்கு கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம் என பாதிக்கப்பட்ட காவல்துறை உத்தியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணம் , காங்கேசன்துறை , கிளிநொச்சி , வவுனியா , முல்லைத்தீவு மற்றும் மன்னார் காவல்துறை அத்தியட்சகர் பிரிவில் கடமையாற்றும் 300 தமிழ் காவல்துரைறயினர்; கடமையாற்றுகின்றார்கள்.
இதில் யாழ்ப்பாணம் மற்றும் காங்கேசன்துறை காவல்துறை அத்தியட்சகரின் கீழ் 150 தமிழ் காவல்துறையினரும் ஏனைய 4 காவல்துறை அத்தியட்சகர் பிரிவுகளின் கீழ் 150 தமிழ் காவல்துறையினரும் கடமையாற்றுகின்றார்கள்.
அவர்கள் அனைவரும் வடமாகாணத்தினுள் வேறு வேறு மாவட்டங்களுக்கு ஒரே நாளில் இடமாற்றம் செய்யப்பட்டனர். இந்நிலையிலையே அவர்கள் இதொரு பழிவாங்கல் நடவடிக்கை என கூறியுள்ளனர்.
இதேவேளை யாழில் காவல்துறையினருடன்; நடைபெற்ற கூட்டமொன்றில் யாழில் நடைபெறும் சட்டவிரோத செயற்பாட்டாளர்களுக்கும் தமிழ் காவல்துறையினருக்;கும் நெருங்கிய தொடர்பு காணப்படுவதனால் தான் சட்டவிரோத செயற்பாட்டை கட்டுப்படுத்த முடியவில்லை என சட்டத்தரணி ஒருவர் பகிரங்கமாக குற்றம் சாட்டி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. #வடமாகாணம் #தமிழ் #காவல்துறைஉத்தியோகஸ்தர்கள் #இடமாற்றம் #பழிவாங்கல்