164
வவுனியா ஈரப்பெரியகுளம் காவல் நிலையத்திற்கு முன்பாக வீதி சோதனை நடவடிக்கையை காவல்துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர். கண்டி நெடுஞ்சாலை ஊடாக செல்லும் பொதுப்போக்குவரத்து வாகனங்கள் உட்பட தனியார் வாகனங்களை மறித்து காவல்துறையினர் தீவிர சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.
அத்துடன் காவல் நிலையத்துடன் அமுக்கப்பட்டுள்ள பொதிகள் சோதனை கூடத்தில் பயணிகளின் பொதிகளை ஸ்கானர் இயந்திரம் ஊடாக சோதனைகளை மேற்கொண்டனர். காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையிலையே சோதனை நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. #வவுனியா #ஈரப்பெரியகுளம் #வீதிசோதனை
Spread the love