ஆசியா நாடுகளில் பரவி வரும் நிமோனியா வைரஸ் இலங்கையையும் தாக்கும் அபாயம் உள்ளதாகவும் இது தொடர்பில் சுகாதார அமைச்சு காண்காணிப்புடன் செயற்பட்டுவருவதாகவும் சுகாதார அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.
குறித்த வைரஸ் தாக்கம் அதிகரிக்குமாயின் நிலைமையை கட்டுபாட்டுக்குள் கொண்டுவர விமான நிலையத்திலும் வைத்தியசாலைகளிலும் ஒரு அவசர திட்டத்தை செயல்படுத்துவதற்கு சுகாதார அமைச்சு தயாராகி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் நோய் பரவுவதை தடுக்கும் நோக்கில் சீனாவிலிருந்து வரும் பயணிகளுக்கு தடைவிதிக்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் வுஹான் மாகாணத்தில் நிமோனியா வைரஸ் தாக்கம் ஏற்பட்டதாக கண்டரியப்பட்டதை தொடர்ந்து உலக சுகாதார அமைப்பு, சீனா சுகாதார அமைச்சை எச்சரித்துள்ளதுள்ள நிலையில் இந்த வைரஸ் தாக்கத்திற்கான சரியான காரணத்தை சீன அதிகாரிகள் விசாரித்து வருவதாக கூறப்பட்டுள்ளது.
இதுவரை வுஹான் மாகாணத்தில் நிமோனியா தாக்கத்திற்கு உள்ளானதாக சந்தேகிக்கப்படும் 44 பேர் வரை கண்டறியப்பட்டுள்ளதாகவும் அதில் 11 பேர் கடுமையான நோய் தாக்கத்திற்குள்ளானவர்களாக இனங்காணப்பட்டுள்ளனர் எனவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது
இதுவரை வந்த அறிக்கைகள் நிமோனியா ஒரு அரிய வைரஸ் அல்லது முன்னர் அறியப்படாத ஒரு நோய்க்கிருமியால் ஏற்படக்கூடும் எனவும் வைரஸ்தொற்று ஏற்பட்டு ஒரு வாரத்தின் பின்பே நோய்தொற்று அறிகுறிகள் வெளிபடுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சார்ஸ் மற்றும் பறவைக் காய்ச்சல் தாக்கம் காரணமாக முந்தைய காலங்களில் 32 நாடுகளில் பல ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டும் ஆயிரக்கணக்கானவர்கள் உயிரிழந்தும் இருந்தமை குறிப்பிடத்தக்கது. #நிமோனியாவைரஸ் #இலங்கை #அபாயம் #சுகாதாரஅமைச்சு #ஆசியா